திருக்குறுங்குடி திவ்ய தேசத்துக்கு ராமானுஜர் விஜயம் செய்தபோது, அங்கு தங்கியிருந்து மற்ற திவ்ய தேசங்களையும் தரிசிக்க எண்ணினார். கேரளத்திலுள்ள திருவனந்தபுரம் பத்மனாப சுவாமியை தரிசிக்கச் சென்றபோது, அங்கு கடைப் பிடிக்கப்படும் சில வழிபாடுகளைத் திருத்தி அமைக்க முயன்றார். அங்கு ராமானுஜருக்கு பலரும் சீடரானார்கள். இதனால் கோபமுற்ற அங்குள்ள சில தாந்தீரீகர்களால் அவர் தாக்கப்படும் சூழ்நிலைக்கு ஆளானார். ஸ்ரீமந் நாராயணன் தனது வாகனமான கருடன் மீது ராமானுஜரை ஏற்றி, இரவோடு இரவாக திருக்குறுங்குடி கோயிலின் திருவட்டப்பாறை மலையின் மீது இறக்கிவிட்டார். திருவனந்தபுரத்தில் இருந்து ராமானுஜரை சுமந்து வந்த கருடன், திருக்குறுங்குடியிலேயே தங்கி விட்டது. இதனால்தான் திருவனந்தபுரம் கோயிலில் கருடர் சன்னதி இல்லை.