பதிவு செய்த நாள்
27
ஏப்
2018
01:04
திருக்கச்சூர்: திருக்கச்சூர் தியாகராஜ கோவிலில், நேற்று, தேரோட்டம் நடந்தது. செங்கல்பட்டு அடுத்த, திருக்கச்சூர் கிராமத்தில், அஞ்சானாட்சி சமேத அமிர்த தியாகராஜ கோவில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு, 20ம் தேதி, சித்திரை பிரம்மோற்சவ விழா துவங்கியது. நேற்று அதிகாலை, தியாகராஜர், அஞ்சானாட்சி, சந்திரசேகர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷே கம் நடந்தது. காலை, 7:00 மணிக்கு, தேரில், சந்திரசேகர் சுவாமி எழுந்தருளினார். காலை, 7:30 மணிக்கு, தேரை வடம்பிடித்து, பக்தர்கள் இழுத்து சென்றனர். மாடவீதிகள் வழியாக சென்று, காலை, 11:45 மணிக்கு, நிலையை வந்தடைந்தார். திருக்கச்சூரை சுற்றி உள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசித்தனர்.