பதிவு செய்த நாள்
09
மே
2018
12:05
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை, மாரியம்மன் கோவில் சித்திரை தேர்த்திருவிழா இன்று நடக்கிறது. நாமகிரிப்பேட்டையில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் சித்திரை மாதம், இறுதியில் தீ மிதிவிழா, தேர்த்திருவிழா நடப்பது வழக்கம். இந்தாண்டு சித்திரை தேர்த்திருவிழா கடந்த, 24ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தினமும் ஒவ்வொரு சமூகத்தினரும் மண்டகப்படி, அபி ?ஷகம், அன்னதானம் செய்து வந்தனர். இரவில் அம்மன் புஷ்ப பல்லாக்கில் நகர் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முக்கிய நாளான இன்று காலை, 10:00 மணிக்கு தீ மிதிவிழாவும், மாலை திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும் நடக்கவுள்ளது. அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, எம்.பி., சுந்தரம், எம்.எல்.ஏக்கள் பாஸ்கர், சந்திரசேகர் மற்றும் பலர் பங்கேற்கின்றனர்.