சபரிமலை: வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை 14ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. ஆராட்டு பவனியின் போது யானை மீதிருந்த சுவாமி சிலை கீழே விழுந்த சம்பவம் தொடர்பாக 17ம் தேதி தேவபிரஸ்னம் நடக்கிறது. வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை வரும் 14ம் தேதி மாலை 5:00 மணிக்கு திறக்கிறது. அன்று வேறு எந்த பூஜைகளும் கிடையாது. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். 15 அதிகாலை 4:00 மணிக்கு நடை திறந்ததும் நிர்மாலய தரிசனமும் தொடர்ந்து அபிேஷகமும் நடைபெறும். தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு நெய்யபிேஷகத்தை தொடங்கி வைப்பார். 19ம் தேதி வரை எல்லா நாட்களிலும் வழக்கமான பூஜைகளுடன்உதயாஸ்மனபூஜை, களபாபிேஷகம், சகஸ்ரகலசம் போன்றவை நடைபெறும்.இரவு 7:00 மணிக்கு படிபூஜை நடைபெறும்.
தேவ பிரஸ்னம்: பங்குனி உத்திர திருவிழா ஆராட்டுக்காக சுவாமி பம்பைக்கு சென்றபோது அப்பாச்சிமேடு அருகே யானை மிரண்டு ஓடியது. இதில்யானை மீதிருந்த பூஜாரி சுவாமி சிலையுடன் கீழே விழுந்தார்.இதனால், மலபாரை சேர்ந்த பத்மனாபசர்மா 17 முதல் 19-ம் தேதி வரை தேவபிரஸ்னம் நடத்துகிறார். அன்று இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.