பதிவு செய்த நாள்
11
மே
2018
11:05
நாமக்கல்: நாமக்கல்லில், பிரசித்தி பெற்ற பலப்பட்டறை மாரியம்மன் கோவில் உள்ளது. பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக, உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியல், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை திறக்கப்பட்டு, எண்ணப்படும். அந்த வகையில், நேற்று ஆஞ்சநேயர் கோவில் உதவி ஆணையாளர் வெங்கடேஷ் மேற்பார்வையில், செயல் அலுவலர் சுதாகர், ஆய்வாளர் அம்சா ஆகியோர் முன்னிலையில், காணிக்கை பணம் எண்ணப்பட்டது. பக்தர்கள், நுகர்வோர் பங்கேற்றனர். இதில், ஒரு லட்சத்து, 80 ஆயிரத்து, 559 ரூபாய்; 24 கிராம் தங்கம், 44 கிராம் வெள்ளி இருந்ததாக அதிகாரிகள் கூறினர். இதற்கு முன், பிப்ரவரியில் உண்டியல் திறக்கப்பட்டது. அப்போது, மூன்று லட்சத்து, 17 ஆயிரத்து 707 ரூபாய்; 17 கிராம் தங்கம், 46 கிராம் வெள்ளி இருந்தது குறிப்பிடத்தக்கது.