செஞ்சி: வடவெட்டி அங்காளம்மன் கோவிலில், அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. மேல்மலையனுார் தாலுகா, வடவெட்டி ரங்கநாதபுரத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில், வைகாசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு காலையில் வினாயகர், பெரியாழி, அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். மாலை 6:00 மணிக்கு உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் செய்தனர். இரவு 7:00 மணிக்கு அன்னதானம் வழங்கினர். இரவு 10:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு சிறப்பு பட்டிமன்றம் நடந்தது.