பதிவு செய்த நாள்
29
மே
2018
12:05
திருத்தணி: கடலீஸ்வரர் கோவிலில், நேற்று, வைகாசி விசாகத்தையொட்டி, 15 ஆயிரம் நெய் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர். திருத்தணி ஒன்றியம், தாடூர் கிராமத்தில், கடலீஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று, வைகாசி விசாகத்தையொட்டி, காலை, 8:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, கோவில் வளாகத்தில் உள்ள முருகர் சன்னதியில் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது, மாலை, 6:00 மணிக்கு, கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள், 15 ஆயிரம் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். இரவு, 8:00 மணிக்கு, உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.