திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், 61 நாட்கள் நிர்வாண பூஜை நடத்த தடை விதித்து, மாவட்ட நீதிபதி மகிழேந்தி உத்தரவிட்டுள்ளார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த, பொக்குல கொண்ட கைலாச ஆசிரமம் பீடாதிபதி, அட்டயோகிஸ்வரா மவுனிதிகம்பரி ?ஷட்ட கோபி. இவர் பேசி, 37 ஆண்டுகள் ஆகிறது. உலக நன்மைக்காக, கடந்த, 25 முதல் வரும், ஆக., 25 வரை, தொடர்ந்து, 61 நாட்களுக்கு, உலக நன்மை வேண்டி, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், திருநேர் அருணாசலேஸ்வரர் கோவில் எதிரே, காலை, மாலை என இரு வேளைகளில், நிர்வாண பூஜையை நடத்தி வந்தார்.ஆன்மீக பக்தர்கள், பெண்களிடையே அசாதாரண சூழல் நிலவுவதாக, திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழுவுக்கு புகார் சென்றது. இதையடுத்து, மாவட்ட நீதிபதி மகிழேந்தி, நிர்வாண பூஜைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில், திருவண்ணாமலை கிரிவலப்பாதை என்பது, ஆன்மீக புண்ணிய பூமி. இதைக் கருத்தில் கொண்டு, மக்களின் பொதுநலனை கருத்தில் கொண்டும், நிர்வாண பூஜை நடத்த தடை விதிக்கப்டுகிறது என, குறிப்பிட்டுள்ளார்.