Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) நன்மை ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, ... கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ஆதாயம் கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ...
முதல் பக்கம் » மாசி ராசிபலன் (13.2.2019 முதல் 14.3.2019 வரை)
மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) மேன்மை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2018
15:56

சகோதர பாசம் கொண்ட மிதுன ராசி அன்பர்களே!

இந்த மாதம் சுக்கிரன், குரு இருவரும் முன்னேற்றம் அளிக்க காத்திருக்கின்றனர். குருபகவான் தற்போது உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் இருக்கிறார். குருபகவான்  குடும்பத்தில் குதூகலத்தை கொடுப்பார். திருமணம் போன்ற சுபவிஷய பேச்சில் நல்ல முடிவு கிடைக்கும். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார்.

பெண்களால் மேன்மை உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குருவின் 5,7-ம் இடத்துப்பார்வைகள் சிறப்பாக அமைந்துள்ளன.  மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நினைத்த செயலை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். தம்பதியர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர் உதவிகரமாக செயல்படுவர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்களின் மேன்மை அறிந்து சரணடையும் நிலை வரலாம்.

குடும்பத்தில் சுக்கிரனால் இனிய அனுபவம் காண்பீர்கள். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். சமூகத்தில் செல்வாக்கு மேம்படும்.  ஆக.2க்கு பிறகு விருந்து, விழா என அடிக்கடி செல்வீர்கள். உறவினர்களிடம் சுமுக நிலை உண்டாகும். புதிய உறவினர்கள் மூலம் உதவி காண்பீர்கள். பெண்கள் ஆதரவாக செயல்படுவர். குறிப்பாக ஆக. 8,9ல் அவர்களால் அதிக அனுகூலம் பெறலாம்.  ஆக. 3,4,5ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஜூலை 17, ஆக.12,13 ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பணியாளர்கள் சுக்கிரனால் சிறப்பான நிலையில் இருப்பர். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். வேலைப்பளு குறையும். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். சக பெண் ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். ஆக.1,2 ல் அலுவலக ரீதியாக முன்னேற்றமான சம்பவம் நடக்கும். ஆனால் புதனால் அவ்வப்போது வீண் பிரச்னை உருவாகி மறையும்.

மின்சாரம், நெருப்பு சம்பந்தமான பணியில் இருப்பவர்கள் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நிர்வாகச் செலவு அதிகரிக்கும். எதிரிகளால் பிரச்னை சந்திக்க வேண்டியதிருக்கும். புதிய தொழில் தொடங்க அதிக முதலீடு செய்ய வேண்டாம்.  ஆக. 6,7,10,11ல் சந்திரனால் தடைகள் குறுக்கிடலாம். சனியால் வீண் அலைச்சல் ஏற்படலாம்.  தொழில் விஷயமாக வெளியூரில் தங்க நேரிடலாம். குருபகவான் சாதக பலனால் முயற்சிக்கேற்ப பலன் கிடைக்காமல் போகாது.  

கலைஞர்கள் முன்னேற்ற பாதையில் செல்வர். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.  மதிப்பு, மரியாதை கூடும். ஆக.2 க்குள் அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும். அரசியல்வாதிகள் பொது நலசேவகர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். பணப்புழக்கத்தில் எந்த குறையும் இருக்காது. ஜூலை 20,21, ஆக.16 ல் மனக்குழப்பம் ஏற்படலாம். மாணவர்களுக்கு புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் விடாமுயற்சியும் கூடுதல் கவனமும் தேவை. இருப்பினும் குருபகவானால் ஓரளவு முன்னேற்றம் காணலாம்.
ஆசிரியரின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். விவசாயிகள்  நெல், மஞ்சள், பயறு வகைகள் மூலம் மகசூல் அதிகரிக்கும்.  கால்நடை வளர்ப்பின் மூலம் கூடுதல் வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் வண்ணம் நிறைவேற சில மாதங்கள் பொறுத்திருக்க வேண்டும்.  

பெண்களுக்கு அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். உங்களால் குடும்பம் சிறந்து விளங்கும். தடைபட்ட திருமணத்தில் நல்ல முடிவு கிடைக்க வாய்ப்புண்டு. புதுமணத் தம்பதியர் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர். ஜூலை 25,26ல் இனிய அனுபவம் காண்பீர்கள்.  பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் கிடைக்க பெறலாம். விருந்து விழா என சென்று வருவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும்.

* நல்ல நாள்: ஜூலை 17,22,23,24,25,26, ஆக.1,2,3,4,5,8,9,12,13
* கவன நாள்: ஜூலை 27, 28,29 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 3,5
* நிறம்: வெள்ளை, மஞ்சள்

பரிகாரம்:
●  நிழல் கிரகங்களான ராகு,கேதுவுக்கு அர்ச்சனை
●  சனியன்று மாலையில் சனீஸ்வரருக்கு எள்தீபம்
●  செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம்

 
மேலும் மாசி ராசிபலன் (13.2.2019 முதல் 14.3.2019 வரை) »
temple
சிந்தித்து செயலாற்றி வரும் மேஷ ராசி அன்பர்களே!

சுக்கிரன் பிப்.25வரை சாதகமான நிலையில் உள்ளார் ... மேலும்
 
temple
ஊக்கத்துடன் முயற்சியில் ஈடுபடும் ரிஷப ராசி அன்பர்களே!

சூரியனும், புதனும் 10-ம் இடத்தில் ... மேலும்
 
temple
அனைவரிடமும் நட்பு பாராட்டும் மிதுன ராசி அன்பர்களே!

செவ்வாய் இந்த மாதம் சாதகமான இடத்தில் இருந்து ... மேலும்
 
temple
கடமையில் கண்ணாக இருக்கும் கடக ராசி நேயர்களே!

புதன்,சனி, குரு மாதம் முழுவதும் நற்பலன் தருவர். ... மேலும்
 
temple
சிந்தனையால் உயர்ந்து நிற்கும் சிம்ம ராசி நேயர்களே!

சுக்கிரன் பிப்.25 வரை நன்மை தருவார். அவரால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.