மதுரை : ""ராமநாமாவை இடைவிடாமல் சொல்பவர் பரமபத வாசல் அடைவது உறுதி, என ஆன்மிக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் கூறினார். மதுரை பாரதி யுவ கேந்திரா சார்பில் மதன கோபால சுவாமி கோயிலில், கல்யாணராமனின் கம்பராமாயணம் தொடர் சொற்பொழிவு நடக்கிறது. அவர், நேற்று பேசுகையில், ""சரபங்க மாமுனிவர் வேதத்தை நன்கு தெளிவுறக் கற்று தேர்ந்தவர். அவர், ராமரிடம் பரமபத மோட்சத்தை அடைய வேண்டினார். பெருமாளிடம் பக்தி செலுத்துபவர் திரும்ப ஜென்மம் எடுக்க விரும்ப மாட்டார். ராமநாமாவை இடைவிடாமல் சொல்பவர் பரமபதவாசல் அடைவது உறுதி. தாயார் மோட்சத்துக்கு போக சிபாரிசு செய்பவர்களுக்கே பெருமாள் மோட்சம் கொடுப்பார். ஜடாயு, சபரி, வாலி ஆகியோருக்கு தாயார் இல்லாமலேயே பகவான் மோட்சத்தை அளித்தார். தாயார் இல்லாவிட்டாலும், ராமரின் பக்கத்தில் லட்சுமணன் இருந்ததால் மோட்சத்தை பெருமாள் அளித்தார். படித்தவர்களது கடமை பிறருக்கும் தான் கற்றதை கற்றுக் கொடுக்க வேண்டும், என்றார்.