பதிவு செய்த நாள்
18
ஜூலை
2018
12:07
தர்மபுரி: ஆடிப்பிறப்பை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, பல்வேறு அம்மன் கோவில்களில், நேற்று, சிறப்பு பூஜை மற்றும் அலங்காரங்கள் நடந்தன. ஆடி முதல் நாளை முன்னிட்டு, தர்மபுரி அடுத்த, ஆலிவாயன்கொட்டாயில் உள்ள, ஓம்சக்தி பாப்பாரப்பட்டி மாரியம்மன் கோவிலில், கடந்த, 10ல் பக்தர்களுக்கு, கங்கணம் கட்டும் நிகழ்ச்சி நடந்தது. 16ல் காலை, 6:00 மணிக்கு கொடியேற்றப்பட்டது. நேற்று காலை, 9:00 மணிக்கு, திரளான பக்தர்கள் பங்கேற்று, பால்குடம் மற்றும் தீச்சட்டி எடுத்தனர். சில பக்தர்கள், அலகு குத்தி, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், தர்மபுரியை சுற்றியுள்ள பல்வேறு கிராமத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், மொடக்கோரி ஆதிசக்தி சிவன் கோவில், பாரதிபுரம் சாலை மாரியம்மன் கோவில், வெளிப்பேட்டைதெரு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்பட, மாவட்டத்திலுள்ள பல்வேறு அம்மன் கோவில்களில், ஆடி முதல் நாளான, நேற்று சிறப்பு பூஜை மற்றும் அலங்காரங்கள் நடந்தன.