பதிவு செய்த நாள்
24
ஜூலை
2018
11:07
கொச்சி: சபரிமலைக்கு வரும் பக்தர்கள், இருமுடியில் கூட, பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது என, கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில், பிரசித்தி பெற்ற, சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு, ஆண்டுதோறும், நாட்டின் பல பகுதிகளில் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.சபரிமலையில், பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்கும் நோக்கில், இரு ஆண்டுகளுக்கு முன், பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் விற்பனைக்கு, கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்தது.சபரிமலை சுற்றுச்சூழல் தொடர்பான வழக்கை விசாரித்த, கேரள உயர் நீதி மன்றம், நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ள தாவது:சபரிமலையில், பிளாஸ்டிக் பொருட்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. இந்த ஆண்டு மண்டல கால பூஜையின் போது, பக்தர்கள், இருமுடியில் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் டப்பாக்கள் என, எந்த வகை பிளாஸ்டிக் பொருட்களையும் எடுத்து வரக் கூடாது.இது தொடர்பான சுற்றறிக்கையை, அண்டை மாநில அரசு தலைமை செயலர்களுக்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.