கிள்ளை: சிதம்பரம் அருகே சி.முட்லூரில் பாரம்பரியம் மிக்க கன்னித் திருவிழாவில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் தலையில் சப்த கன்னிகளை சுமந்து ஆடிப்பாடி சென்று உப்பனாற்றில் விட்டனர்.கடந்த 16ம் தேதி பூப்போடுதல் நிகழ்ச்சி துவங்கிது. இளைஞர்கள், இளம் பெண்கள் தங்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டி பூப்போட்டனர். நேற்று காலை சி.முட்லூர் உப்பனாற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் 20க்கும் மேற்பட்ட கிளை சப்த கன்னிகளை ஊர்வலமாக தலையில் சுமந்து சென்று ஆற்றில் விட்டனர்.