பதிவு செய்த நாள்
25
ஜூலை
2018
11:07
திருப்பதி: திருமலையில் நடக்கவுள்ள கும்பாபிஷேகத்தின் போது குறைந்த எண்ணிக்கையில், தர்ம தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் உள்ள பிரசித்தி பெற்ற திருமலை ஏழுமலையான் கோவிலில், அடுத்த மாதம், 11 – 16 வரை மகா சம்ப்ரோக் ஷணம் எனப்படும், கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. இது தொடர்பாக, திருமலையில் நேற்று காலை அறங்காவலர் குழு கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்ததும், அறங்காவலர் குழு தலைவர் சுதாகர் யாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருமலையில், கும்பாபிஷேக நாட்களில், மிக குறைந்த எண்ணிக்கையில் பக்தர்களுக்கு தர்ம தரிசனம் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்து உள்ளது. அதுகுறித்த விபரங்கள் இன்னும் இரண்டு நாட்களில் வெளியிடப்படும். இந்த நாட்களில், திவ்ய தரிசனம், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், பிரேக், ஆர்ஜித சேவைகள், விரைவு தரிசனம், பரிந்துரை கடித தரிசனங்கள் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.