நாரை ஒன்று மதுரைத் தலத்தின் புனிதத்தை உணர்ந்து மதுரை நகருக்கு வந்தது. தினமும் பொற்றாமரைக் குளத்தில் நீராடி சோமசுந்தரக் கடவுளை தொழுதது. இவ்வாறு பதினைந்து நாள் தொழுது மறு நாளும் குளத்தில் நீராடச் சென்றபோது இறைவன் தோன்றி நாரையைத் தம்முடன் சிவலோகத்திற் சேர்த்து முக்தி கொடுத்தருளினார். இறைவனிடம் நாரை, ‘தேவா! இப்புனித குளத்தில் உள்ள மீன்களை எம் இனத்தவர் உண்டால் அவர்களைப் பாவம் பற்றிக் கொள்ளும். எனவே இக்குளத்தில் மீனே இல்லாமல் செய்தருள வேண்டும்.!” என்ற வரமும் கேட்டுப்பெற்றது. அன்று முதல் இன்றுவரை பொற்றாமரைக்குளத்தில் மீன்களோ ஏனைய நீர் வாழ் உயிர்களோ இன்றி ஒழிந்தன. கூடற்காண்டம் முற்றும்.
மேலும்
ஸ்ரீ ராஜ மாதங்கி
8. திருவிளையாடற்புராணம் சுருக்கம் »