தேவர்களின் அரசன் தேவேந்திரன். இவன் "விருத்திகாசுரன் என்ற கொடிய அரக்கனைக் கொன்றான் எனவே "பிரம்மஹத்தி என்ற குற்றத்திற்கு ஆளானான். இக்குற்றம் நீங்க மண்ணுலகத்திற்கு வந்தான். பல புண்ணிய நதிகளில் நீராடினான். புனிதத் தலங்களில் இறைவனை வழிபட்டான். என்றாலும் "பிரம்மஹத்தி என்ற பாவம் நீங்கவில்லை. கடைசியில் கடம்பவனத்திற்குள் புகுந்தான். அங்கே ஒரு பெரிய கடம்பமரத்தின் அடியில் சிவலிங்கம் இருப்பதைப் பார்த்தார். பெருமகிழ்ச்சி அடைந்தான். ஏனெனில் அது, "தானே தோன்றி முளைத்தச் சிவலிங்கம்.
அருகில் இருந்த குளத்தில் குளித்தான். தேவலோகத்தில் இருந்து பூசைக்கு வேண்டிய பொருட்களைக் கொண்டுவரச் செய்தான். ஆனாலும் பூசைக்கு மணம் மிகுந்த மலர் எதுவும் அங்கு கிடைக்கவில்லை வருந்தினான். துயரம் நெஞ்சை அடைத்தது. உள்ளம் சோர்ந்தான். அன்பர்களின் துயர் காணச் சகிப்பானா இறைவன்? கடவுளின் அருள் கருணையாக மாறியது. அந்தக் கருணை, அங்கிருந்த குளத்தில், பொற்றாமரை மலர்களாக மலர்ந்து ஒளியும் மணமும் ஒருசேர வீசின. பொற்றாமரைகள் மலர்ந்த குளம் - "பொற்றாமரைக்குளம் எனப்பெயர் பெற்றது. அம்மலர்களால் இறைவனைத் தொழுதான் இந்திரன். கருணையே வடிவான சோமசுந்தரக் கடவுள், தேவேந்திரனின் பக்திக்கு மகிழ்ந்தான்.
அவனிடம் ""சித்திரை மாதம் சித்திரா பௌர்ணமி தோறும் இங்கு வந்து என்னை வணங்கினால் ஓராண்டு என்னைப் பூஜை செய்த பலன் கிடைகும் என்று கூறி, அவனது பிரம்மஹத்தி தோஷத்தையும் நீக்கினார். தேவர் தலைவனும், சொக்கனாதரைத் தன் மனக்கோவிலில் பிரதிஷ்டை செய்து, தன் தேவலோகம் சென்று பன்னெடுங்காலம் நல்லாட்சி புரிந்தான்.
மேலும்
ஸ்ரீ ராஜ மாதங்கி
8. திருவிளையாடற்புராணம் சுருக்கம் »