விக்கிரம சோழன் வடநாட்டு மன்னர்களின் துணையுடன் பெரும்படை கொண்டு வங்கிய சேகர பாண்டியன் மீது போர் தொடுத்தான். கடும் போரில் பாண்டியப் படை தோல்வி அடைந்தது. வெற்றிச் சங்கு ஊதினான் சோழன். அப்போது சோமசுந்தரக் கடவுள் வேட்டுவ வீரன் வடிவம் ஏந்தி வந்து கணை தொடுத்தார். ஓர் அம்பு பதினாறாயிரம் வீரர்களைக் கொன்றது கண்டு திகைத்த சோழன் அம்பை எடுத்துப் பார்த்தான். அதில் சுந்தரேசன் என்னும் பெயர் எழுதப்பட்டிருந்தது. இது இறைவனின் செயல் என்று அறிந்த சோழன் தோற்றவனான். இறைவனின் துணையால் பாண்டியன் வெற்றி பெற்றான்.
மேலும்
ஸ்ரீ ராஜ மாதங்கி
8. திருவிளையாடற்புராணம் சுருக்கம் »