ஆவணி கிருத்திகை: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03செப் 2018 12:09
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், ஆவணி கிருத்திகை விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், மாதந்தோறும் கிருத்திகை விழா விமரிசையாக நடைபெறும். நேற்று, கிருஷ்ண ஜெயந்தியுடன் வந்த கிருத்திகை நாளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். குழந்தைகளுக்கு காது குத்தி, அலகு குத்தி, காவடிகளும் எடுத்தனர்.மேலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மொட்டை அடித்து சரவணப் பொய்கையில் நீராடினர். பின், நீண்ட வரிசையில் நின்று, கந்தனை அர்ச்சனை செய்து வழிபட்டனர்.கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி, மூலவர் கந்தசுவாமி, தங்கக்கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.