நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு உறியடி திருவிழா நடந்தது. நடுவீரப்பட்டு திரவுபதியம்மன் கோவிலில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு நேற்று உறியடி திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று காலை 9:00 மணிக்கு விநாயகர், கிருஷ்ணர், திரவுபதியம்மன் உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது. மாலை 3:00 மணிக்கு கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 4:00 மணிக்கு கிருஷ்ணர் வீதியுலா வந்து கோவில் எதிரில் உறியடி திருவிழா நடந்தது. உறியடி நிகழ்ச்சியில் ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.