பதிவு செய்த நாள்
03
செப்
2018
01:09
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார், உலகளந்த பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் வேணுகோபாலன் பிரம்மோற்சவ விழா மற்றும் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நேறற்று சிறப்பு பூஜை நடந்தது. உலகளந்த பெருமாள் கோவிலில் வெணுகோபாலன் பிரம்மோத்சவ விழா கடந்த 26ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது. காலை 7:30 மணிக்கு, பாமா, ருக்மணி சமேத ராஜகோபாலன் சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடாகி ஜீயர் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சாற்றுமறை, மண்டகபடி நடந்தது. சுவாமி ஆஸ்தனம் எழுந்தருளியவுடன், பகல் 11:00 மணிக்கு, மகாசாந்தி ஹோமம், திருமஞ்சனம், சேவைசாற்றுமறை நடந்தது. மாலை 6:00 மணிக்கு, ஸ்ரீதேவி புதேவி சமேத தேகளீசபெருமாள், ஆளிலை கண்ணணுடன் எழுந்தருளி, கொடி மரத்தில், ஜீயர் சுவாமிகள் சங்குபால் அர்க்யம் (பால் ஊட்டுதல்) வைபவம் நடந்தது.
இரவு 8:00 மணிக்கு, ருக்மணி, சத்யபாமா சமேத ராஜகோபாலன் புஷ்ப விமானத்தில் வான வேடிக்கையுடன் வீதியுலா நடந்தது. ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜாச்சாரியர் தலைமையில் நடந்த இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம்: வி.மருதுார் பஜனை கோவில் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சந்தான வேணுகோபால் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நேற்று காலை 6.00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு
அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு சுவாமி வீதியுலா மற்றும் உறியடி உற்சவம் நடந்தது.
கள்ளக்குறிச்சி: தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி, ராமர், லஷ்மணர், சீதை, ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு நேற்று சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து மூலவர், உற்சவர் கிருஷ்ணனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, அலங்கரித்து பூஜை நடந் தது. கிருஷ்ண ஜெயந்தி சிறப்புகள் குறித்து தேசிக பட்டர் பக்தர்களுக்கு விளக்கினார். இன்று காலை 9:00 மணிக்கு பெருமாள் கோவில் மற்றும் தேரோடும் வீதிகளில் உறியடி உற்சவம் நடக்கிறது. இதேபோல் கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் மற்றும் சித்தேரி தெரு நவநீதகிருஷ்ணன் கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் நடந்தது. திண்டிவனம்: திண்டிவனம், லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, கிருஷ்ணருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பக்தர் ஒருவர், கிருஷ்ணர் வேடமணிந்து முக்கிய வீதிகள் வழியாக சென்று பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.
கண்டாச்சிபுரம்: கீழ்வாலை ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நேற்று காலை 7:00 மணி முதல் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை ஒதியத்துார் ஹரி பஜனைக் குழுவினர் வீதியுலா மற்றும் உறியடி உற்சவமும், இரவு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் சுவாமிக்கு திருக்கல்யாணம் மற்றும் வீதியுலா நடந்தது.