கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ஆதிபராசக்தி மன்றத்தின் வெள்ளிவிழாவை முன்னிட்டு நேற்று கஞ்சிக் கலய ஊர்வலம் நடந்தது. விழாவிற்கு மன்றத்தின் மாவட்ட தலைவர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். கண்டாச்சிபுரம் மன்ற தலைவர் அருள்ஜோதி வரவேற்றார். காலை 4:00 மணிக்கு சிறப்பு அபிேஷகம் நடைபெற்றது. தொடர்ந்து சக்திக் கொடியேற்றம், மற்றும் கோ பூஜை நடந்தது. பின்னர் கலச விளக்கு வேள்வி பூஜை மற்றும் இலவச திருமணங்கள் நடை
பெற்றன. பின்னர் நடந்த கஞ்சிக்கலய ஊர்வலத்தை டாக்டர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
பஞ்சவாத்தியக் குழு இசையுடன் கஞ்சிக் கலயம் மற்றும் ஆதிபராசக்தி திருஉருவப்பட
ஊர்வலம் நடந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கஞ்சிக் கலயம் சுமந்தனர். அன்பரசு நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை மன்ற செயலர் கணபதி, சிவக்குமார் ஆகியோர் செய்தனர்.