காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஜே.ஆர்.சி., மாணவ - மாணவியர், ஏகாம்பரநாதர் கோவிலில், உழவாரப் பணி மேற்கொண்டனர்.காஞ்சிபுரம், செவிலிமேட்டில், சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியைச் சேர்ந்த, ஜே.ஆர்.சி., மாணவ - மாணவியர் காஞ்சிபுரத்தில் உள்ள கோவில்களில், அவ்வப்போது உழவாரப் பணி மேற்கொண்டு வருகின்றனர். அதன் படி, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் மேற்கொண்டனர். கோவில் உட்பிரகாரத்தில் உள்ள தரைப் பகுதியை சுத்தம் செய்தனர்.