Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) கவுரவம் துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) ... தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) உற்சாகம் தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) ...
முதல் பக்கம் » பங்குனி ராசிபலன் (15.3.2019 முதல் 13.4.2019 வரை)
விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) பெருமை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 செப்
2018
12:35

துன்பத்தில் தோள் கொடுக்கும் விருச்சிக ராசி அன்பர்களே!

சூரியன், செவ்வாய், கேது ஆகியோரால் நன்மை காண்பீர்கள். புதன் அக்.3 வரை நற்பலன் கொடுப்பார். முயற்சியில் வெற்றி கிடைக்கும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். இறையருளால் மனதில் நிம்மதி நிலைக்கும். 12-ம் இடத்தில் இருக்கும் குருபகவான் அக்.4ல் உங்கள் ராசிக்கு அடியெடுத்து வைப்பது  சிறப்பானது அல்ல. இருந்தாலும்  அவரது அனைத்து பார்வைகளும் சிறப்பாக உள்ளது.

பொருளாதார வளம் சிறக்கும். எந்த செயலையும் கச்சிதமாக செய்து முடிக்கும் வல்லமை பெறுவீர்கள். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும். குடும்பத்தில் வீட்டிற்கு தேவையான வசதி வாய்ப்புகள் பெருகும். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். அக்.12,13,14ல் பெண்கள் மூலம் வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். அக்.4க்கு பிறகு குருவின் 5-ம் இடத்துப் பார்வையால் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.   

பணியாளர்களுக்கு வேலையில் நிம்மதியும், திருப்தியும் கிடைக்கும்.  பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதில்  தடை இருக்காது. சக ஊழியர்களின் ஒத்துழைப்பு நல்லமுறையில் இருக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவும், அனுசரணையும் கிடைக்கும். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் முன்னேற்றம் காணலாம். அவர்கள் விண்ணப்பித்த கடனுதவி லோன் எளிதில் கிடைக்கும். அக்.6,7ல் சிறப்பான நாட்களாக அமையும். பணியிடத்தில் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். அக்.3க்கு பிறகு தனியார் துறையில் வேலைபார்ப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்.

முக்கிய பொறுப்புகளை மற்றவரிடம் ஒப்படைக்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் சேமிக்கும் விதத்தில் பொருளாதார வளம் மேம்படும். ஆன்மிக சம்பந்தப்பட்ட மற்றும் பூஜை பொருள்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவர். பங்கு வர்த்தகத்தில் அதிக ஆதாயம் கிடைக்கும்.  சனி, ராகுவால் அவ்வப்போது எதிரிகளின் இடையூறு தலைதூக்கலாம். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகலாம். செப்.27,28ல் அதிர்ஷ்டவசமாக வருமானத்தைக் காணலாம். எதிரிகளின் இடையூறை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். செப்.17,18,19, அக்.10,11,15,16 ல் வீண் விரயம் ஏற்படலாம்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவதில் தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். புகழ், பாராட்டு தட்டிப் பறிக்கப்படலாம். சக கலைஞர்களின் ஆதரவு ஓரளவு கிடைக்கும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் வளர்ச்சி காண்பர். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். விடாமுயற்சியின் பயனாக எதிர்பார்த்த பதவி கிடைக்கும். மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். செப்.25,26ல் மனக்குழப்பம் ஏற்படலாம். மாணவர்கள் முன்னேற்றத்துடன் காணப்படுவர். புதன் சாதகமான இடத்தில் இருப்பதால் கல்வி வளர்ச்சி உண்டாகும். பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி காணலாம். நற்செயலில் ஈடுபட்டு பெற்றோருக்கு பெருமை சேர்ப்பர். ஆசிரியர்களின் வழிகாட்டுதல் வளர்ச்சிக்கு துணைநிற்கும்.

விவசாயிகளுக்கு எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். மஞ்சள், கேழ்வரகு, சோளம் காய்கறி, பழவகைகள் போன்றவை மூலம் நல்ல வருமானத்தைக் காணலாம். கறுப்பு நிற தானியம் பயிரிடுவதை தவிர்க்கவும். சொத்து வாங்க வாய்ப்புண்டு. பக்கத்து நிலத்துக்காரர்கள்  உதவிகரமாக செயல்படுவர். வழக்கு, விவகாரத்தில் முடிவு சாதகமாக இருக்கும்.

பெண்கள் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவர். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சுய தொழில் செய்து வரும் பெண்கள் தொழிலில் அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம். செப்.20,21,அக்.19ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனப்பொருள் வரப் பெறலாம். செப்.29,30,அக்.1 ஆகிய நாட்கள் சிறப்பானதாக அமையும். செவ்வாயால் புதிய பதவியும் தேடி வரும்.

* நல்ல நாள்: செப்.20, 21, 27, 28, 29, 30, அக்.1, 6, 7, 8, 9, 12, 13, 14, 17
* கவன நாள்: அக். 2, 3 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 1, 7, 9 நிறம்: பச்சை, சிவப்பு

பரிகாரம்:
●  வெள்ளியன்று நாகதேவதைக்கு பால் அபிஷேகம்
●  தேய்பிறை அஷ்டமியன்று  பைரவர் அர்ச்சனை
●  வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு வில்வ மாலை

 
மேலும் பங்குனி ராசிபலன் (15.3.2019 முதல் 13.4.2019 வரை) »
temple
நல்லதை மட்டுமே சிந்திக்கும் மேஷ ராசி அன்பர்களே!

சூரியனும், ஏப்.9ல் புதனும் சாதகமற்ற இடத்திற்கு ... மேலும்
 
temple
திட்டமிட்டு செயலாற்றி வரும் ரிஷப ராசி அன்பர்களே!

சூரியன் தொடர்ந்து நற்பலனை வாரி வழங்குவார். ... மேலும்
 
temple
மதிநுட்பத்தால் வெற்றி பெறும் மிதுன ராசி அன்பர்களே!

சூரியன், குருபகவான் நற்பலன் வழங்குவர். ... மேலும்
 
temple
கலையுணர்வுடன் ரசித்து வாழும் கடக ராசி அன்பர்களே!

சனி, கேதுவால் நற்பலன்கள் தொடரும். புதன் ஏப்.8 ... மேலும்
 
temple
சிந்தித்து செயலாற்றி வரும் சிம்ம ராசி அன்பர்களே!

குரு, ராகுவால் இந்த மாதம் நன்மை உண்டாகும். பொன், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.