Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) பெருமை விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ... மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) குறை தீரும் மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ...
முதல் பக்கம் » பங்குனி ராசிபலன் (15.3.2019 முதல் 13.4.2019 வரை)
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) உற்சாகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 செப்
2018
12:36

தன்னலம் கருதாமல் தொண்டாற்றும் தனுசு ராசி அன்பர்களே!

சூரியன் உங்களுக்கு சாதகமாக கன்னி ராசிக்கு வருகிறார். சுக்கிரனாலும் நன்மை அதிகரிக்கும். புதன் அக்.3ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நற்பலனைத் தருவார். சூரியனால் உங்களுக்கு இருந்த பொல்லாப்பு மறையும். செல்வாக்கு அதிகரிக்கும். சமூகத்தில் மரியாதை கூடும். அக்.4 வரை குரு பக்கபலமாக இருப்பதால் எண்ணியது இனிதே நிறைவேறும். அதன் பிறகு குருபகவான் உங்கள் ராசிக்கு 12ம் இடத்திற்கு வருவதால் சுமாரான பலன் கிடைக்கும்.  இது சுமாரான நிலையே. இங்கு அவரால் பொருள் விரயம் ஏற்படும். வீண் அலைச்சல் ஏற்படும். குடும்பத்தில்  சுக்கிரனால் பணவரவு அதிகரிக்கும்.

சொந்தபந்தங்களின் வருகையால் குடும்பத்தில் உற்சாகம் உண்டாகும்.  சுபவிஷயத்தில் நல்ல முடிவு கிடைக்கும். கணவன், மனைவி இடையே இருந்த சண்டை, சச்சரவு அடியோடு மறையும். விருந்து விழா என சென்று வருவீர்கள். புதுமணத் தம்பதிகள் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர். உங்கள் முன்னேற்றத்திற்கு பெண்கள் உறுதுணையாக இருப்பர். பணியாளர்களுக்கு புதனால் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். அதிகாரிகளின் ஆதரவும் சிறப்பாக கிடைக்கும். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு தகுந்த மரியாதை கிடைக்கும். சகபெண் ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அக்.8,9ல் எதிர்பாராத நன்மை கிடைக்கப் பெறுவீர்கள்.

முக்கிய கோரிக்கைகளை நிர்வாகத்தினரிடம் அப்போது  வைப்பது நல்லது. செவ்வாயால் நெருப்பு, மின்சாரம் தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தடைகள் அனைத்தும் விலகும். இதனால் கூடுதல் வளர்ச்சியைக் காண்பீர்கள்.  தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கிய வர்கள் அவர்களின் பிடியில் இருந்து விடுபடுவர். உங்கள் முன்னேற்றத்துக்கு பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர். முக்கிய பொறுப்புகளை அவர்களின் வசம் ஒப்படைப்பது நல்லது. பெண்களை பங்குதாரராக கொண்ட வணிகம் சிறப்படையும். வெளியூர் பயணம் அடிக்கடி செல்ல நேரிடும். பங்கு வர்த்தகம் மூலம்  லாபம் கிடைக்க பெறுவீர்கள். குறிப்பாக செப்.29,30, அக்.1ல் அதிர்ஷ்டவசமாக பணம் வரும். எதிரிகளின் இடையூறை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். செப்.20,21, அக்.12,13,14,17ல் சந்திரனால் சிறு தடைகள் குறுக்கிடலாம்.

செவ்வாயால் பொருள் களவு ஏற்பட வாய்ப்புண்டு.  பகைவர் வகையில் தொல்லை வரலாம். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.  கலைஞர்கள் ரசிகர்களின் மத்தியில் பாராட்டு, புகழ் பெறுவர். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சிலருக்கு தொழில் ரீதியாக நீண்டதூர பயணம் செல்ல நேரிடும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர்.  தொண்டர்களின் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும்.  மாணவர்கள் நல்ல வளர்ச்சியை எதிர்நோக்கலாம். புதன் சாதகமாக இருப்பதால் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவர். ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்று நன்மை காண்பீர்கள். பெற்றோர் மற்றும் நண்பர்களின் வழிகாட்டுதல் வளர்ச்சிக்கு துணைநிற்கும்.

விவசாயிகள் சீரான பலன்  பெறுவர். விளைச்சல் சுமாராக இருந்தாலும் உழைப்புக்கு தகுந்த வருமானம் கிடைக்கும். புதிய பயிர்சாகுபடியில் அதிக முதலீடு செய்ய வேண்டாம். கால்நடை வகையில் எதிர்பார்த்த வருமானத்தைக் காணலாம். புதிய சொத்து வாங்க சில காலம் பொறுத்திருக்க வேண்டும். வழக்கு, விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்       

பெண்களால் குடும்ப வாழ்வு சிறப்படையும்  கணவர் மற்றும் குடும்பத்தாரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். வீட்டுச் செலவுக்கான தேவையான பணம் தாராள அளவில் கிடைக்கும். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். திருமணம் போன்ற சுபவிஷயத்தில் நல்ல முடிவு கிடைக்க வாய்ப்புண்டு. வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். புதிய பதவியும் தேடி வரும். செப். 22,23,24ல் புத்தாடை அணிகலன்கள் வாங்க யோகமுண்டு.

* நல்ல நாள்: செப்.17, 18, 19, 22, 23, 24, 29, 30, அக்.1, 2, 3, 8, 9, 10, 11, 15, 16
* கவன நாள்: அக்.4, 5 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 2, 3, 5   நிறம்: நீலம், பச்சை

பரிகாரம்:
●  செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம்
●  பவுர்ணமியன்று மாலையில் கிரிவலம் வருதல்
●  ஏகாதசியன்று பெருமாளுக்கு துளசி அர்ச்சனை

 
மேலும் பங்குனி ராசிபலன் (15.3.2019 முதல் 13.4.2019 வரை) »
temple
நல்லதை மட்டுமே சிந்திக்கும் மேஷ ராசி அன்பர்களே!

சூரியனும், ஏப்.9ல் புதனும் சாதகமற்ற இடத்திற்கு ... மேலும்
 
temple
திட்டமிட்டு செயலாற்றி வரும் ரிஷப ராசி அன்பர்களே!

சூரியன் தொடர்ந்து நற்பலனை வாரி வழங்குவார். ... மேலும்
 
temple
மதிநுட்பத்தால் வெற்றி பெறும் மிதுன ராசி அன்பர்களே!

சூரியன், குருபகவான் நற்பலன் வழங்குவர். ... மேலும்
 
temple
கலையுணர்வுடன் ரசித்து வாழும் கடக ராசி அன்பர்களே!

சனி, கேதுவால் நற்பலன்கள் தொடரும். புதன் ஏப்.8 ... மேலும்
 
temple
சிந்தித்து செயலாற்றி வரும் சிம்ம ராசி அன்பர்களே!

குரு, ராகுவால் இந்த மாதம் நன்மை உண்டாகும். பொன், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.