Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உத்திரமேரூர் தர்மராஜா கோவிலில் மஹா ... ஷீரடி சாய்பாபா பாதுகை: திருப்பூர் பக்தர்கள் தரிசனம் ஷீரடி சாய்பாபா பாதுகை: திருப்பூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டுக்கல்லில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
எழுத்தின் அளவு:
திண்டுக்கல்லில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

பதிவு செய்த நாள்

15 செப்
2018
04:09

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் இந்து தர்ம சக்தி கட்சி சார்பில் விநாயகர் சிலைகள் கோட்டைக குளத்தில் கரைக்கப்பட்டது. இந்து தர்ம சக்தி கட்சி சார்பில் 13 விநாயகர் சிலைகள் ஊர்வல மாக சென்று கோட்டைக்குளத்தில் கரைத்தனர். இதில் மாநில பொது செயலாளர் மகேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் செல்வகுமார் முன்னிலை வகித்தார் மாநில
தலைவர் ஸ்ரீநித்திய சர்வானந்தா, பாரத்சேனா மாநிலை தலைவர் செந்தில் கண்ணன், துணைத்தலைவர் சிவா பங்கேற்றனர்.

ஒட்டன்சித்திரம்: ஒட்டன்சித்திரம் கிராமங்களில் இந்து முன்னணி சார்பில் 63 விநாயகர் சிலைகள், விநாயகர் சதுர்த்தி அன்று (செப்.,13ல்) பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு அலங் காரத்துடன், பூஜைகள் நடந்தது.

இவை அனைத்தும், நேற்று (செப்.,14ல்) மாலை செக்போஸ்ட் பகுதிக்கு கொண்டு வரப்பட்டது.
மாவட்ட செயலாளர் தளபதி ரகுபதி, ஒன்றிய தலைவர் பொன்னுச்சாமி தலைமை வகித்தனர். நகர பொதுச் செயலாளர் ராஜா வரவேற்றார், மாநில பேச்சாளர் மூகாம்பிகை மணி உட்பட பலர் பேசினர். பின்னர் மாநில இளைஞரணி செயலாளர் தங்கராஜ் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். பின் கொட்டும் மழையில் ஊர்வலம் சென்று, விருப்பாட்சி தலையூற்றில் சிலைகள் கரைக்கப்பட்டன.

நிலக்கோட்டை: நிலக்கோட்டையில் இந்து முன்னணி சார்பில் நிலக்கோட்டை, சிலுக்கு வார்பட்டி, தோப்புப்பட்டி, கோட்டூரில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று செப்., 14ல் அணைப்பட்டி வைகை ஆற்றில் சிலைகளை கரைக்க நிலக் கோட்டை கொண்டு வரப்பட்டு ஊர் வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.

முன்னதாக கூட்டத்திற்கு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். ஒன்றிய பொது செயலாளர் சிவகுமார் வரவேற்றார். தலைவர் பரமேஸ்வரன், நகர தலைவர்கள் கருப்பு முருகன், செந்தில்குமார் முன்னிலை வகித்தனர்.

வத்தலகுண்டு: இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் வேலுச்சாமி, செயலாளர் அண்ணாதுரை முன்னிலை வகித்தனர். நகர தலைவர் மதுரைவீரன் வரவேற்றார். கிராமங்களில் இருந்து சிலைகள் வத்தலக்குண்டு கொண்டு வரப்பட்டு ஊர்வலம் நடந்தது.

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை ஒன்றிய இந்து முன்னணி சார்பில், லந்தகோட்டை, கூடலூர், பாளையம், குஜிலியம் பாறை உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 18 விநாயகர் சிலைகள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப் பட்டன.

ஆர்.கோம்பை ஊராட்சி பங்களாமேடு அருகே உள்ள குளத்தில் சிலைகள் கரைக்கப்பட்டன. எரியோடு சுற்றுப்பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 15 விநாயகர் சிலைகளும் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு பங்களாமேட்டு குளத்தில் கரைக்கப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar