கொளஞ்சியப்பர் கோவில் உண்டியலில் பக்தர்கள் ரூ.22 லட்சம் காணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19செப் 2018 11:09
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் உண்டியல்களில் 21 லட்சத்து 93 ஆயிரத்து 551 ரூபாய் காணிக்கை இருந்தன. விருத்தாசலம், மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் உள்ள 8 உண்டியல்களை திறந்து காணிக்கை எண்ணும் பணி, இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ரேணுகாதேவி முன்னிலையில் துவங்கியது. ஆய்வாளர் லட்சுமிநாராயணன், செயல் அலுவலர் நாகராஜன், மேலாளர் குருநாதன், கரூர் வைஸ்யா பாங்க் மற்றும் கோவில் ஊழியர்கள் பலர் உடனிருந்தனர். உண்டியலில் 21 லட்சத்து 93 ஆயிரத்து 551 ரூபாய் ரொக்கம், 55 கிராம் தங்கம், 1,300 கிராம் வெள்ளிப் பொருட்கள் இருந்தன. இதேபோன்று, கடந்த ஏப்ரல் 17ம் தேதி உண்டியல்கள் திறப்பின் போது, 12 லட்சத்து 72 ஆயிரத்து 843 ரூபாய் காணிக்கை இருந்தது குறிப்பிடத்தக்கது.