இம்மாதத்தில் அதிகாலை மக்கள் வெள்ளமென திரண்டு அலைமோதும் காட்சி அற்புதமாகும். அதிகளவில் பெண்களே வந்து கூடுவர். பத்துநாட்கள் தைலக்காப்பு என்ற எண்ணெய்க் காப்பு விழாவும், மாணிக்க வாசகப் பெருமான் எழுந்தருளி வர திருவெம்பாவை பாக்களை பக்தியுடன் தினமும் இசைப்பார்கள். சித்திரை வீதிகளில் இறையனார் எழுந்தருளி திருக்காட்சி அருள்புரிவார். அஷ்டமி திதியன்று அன்னை ஸ்ரீ மீனாக்ஷி அஷ்டமி சப்பரத்தில் வெளிவீதிகளில் திருஉலா திருக்காட்சி நிகழ்த்துவர். அய்யன் பிரியாவிடையுடன் உலா வருவார். மீனாக்ஷி சப்பரத்தை பெண்கள் வடம்பிடித்து இழுப்பர். அம்மையப்பர் ரிஷப வாகனத்தில் எழுந்தருள்வதுடன் மாரட் வீதிகளிலும் வெளி வீதிகளிலும் அஷ்டமி பிரதக்ஷிணம் நடைபெறுகிது. திருவாதிரையன்று முடிவுறும் இவ்விழா அத்திருவாதிரை நாளில் ஐந்து நடராஜ மூர்த்திகளும் புறப்பாடாகி வருவார்கள்.
தை மாத விழா
"தெப்போற்சவம்
தை மாதத்தின் முதல் நாள் மகர சங்கராந்தி துவக்கம். திருவாதிரை நட்சத்திரத்துடன் முடிவடையும் பத்து நாட்கள் திருவிழாவாகும். தைத் திருவாதிரை நாளில் பொற்றாமரைக் குளத்திலும், பூச நட்சத்திரத்தன்று தெப்பக்குளத்திலும் தீர்த்த வாரி நடைபெறும். அம்மையப்பர் அனுப்பாடி வரை திரு உலா வருவர்.
மகர சங்கராந்தியன்று கல்யானை கரும்பு தின்ற திருவிûளாயடற் புராணப் படல விளக்க விழா நிகழும்.
தை மாதம் பன்னிரெண்டாம் நாள் பூச நட்சத்திரத்தில் யானை எய்திய படலமும்; படல எண் 22 விளக்க விழாவும் நிகழும். புனர்பூச நட்சத்திரத்தன்று கதிரறுப்பு விழா நடைபெறும். பூச நட்சத்திரத்தன்று தெப்ப விழா. இவ்விழா திருமலை மன்னரின் பிறந்த நட்சத்திர தினத்தில் நடைபெறச் செய்ததால் இதனை ராஜ உற்சவம் என்பர். மன்னர் திருமலையார் புதுமண்டப மெழுப்புகையில் தோஷம் ஏற்பட அதை நிவர்த்தி செய்யும் வகையில் அவருடைய மந்திரி நீலகண்ட தீக்ஷிதர் கூறியதற்கிணங்க வண்டியூரில் ஒரு பெரிய குளம் வெட்டி சுற்றிப்படிகள் அமைத்து, குளத்தின் மையப்பகுதியில் சிறு கோபுரத்துடன் கூடிய மைய மண்டபமும் அமைத்து அக்குளத்தில் அம்மையப்பன் தெப்பம் - மிதப்புத்தேர் தெப்பத்தில் அமர்ந்து வலம் வரும் தெப்போற்சவத்தை அவருடைய ஜென்ம நட்சத்திரத்தன்றே நிகழ்த்துமாறு கூறியதற்கிணங்க அவ்வண்ணமே செய்தார். அதுவே இன்றளவில் விமர்சையாக நடைபெற்று வருகிறது.
மேலும்
ஸ்ரீ ராஜ மாதங்கி
21. மதுரை திருக்கோவில் திருவிழாக்கள் »