இவ்விழா தைமாதம் மக நட்சத்திரத்தன்றே சுவாமி சன்னதி கொடி மரத்தில் எட்டுக்கொடிகள் ஏற்றி 41 நாட்கள் கொண்டாடும் பெரு விழாவாகும். மாசி மகத்தில் வைகை நதியில் தீர்த்த வாரி நிகழும். விநாயகர், சுப்ரமண்யர், சந்திரசேகரப் பெருமான், சண்டேஸ்வரர், பிராதான தேவதைகளாய் ஸ்ரீ மீனாக்ஷி சோமசுந்தரர், நந்திதேவர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர்களுக்கும் எடுக்கப்படும் சிறப்பு விழாவே இம்மண்டல விழாவாகும். சித்திரை வீதிகளில் இறைவியர் வீதி உலாக்காட்சி நடைபெறும். மௌன உற்சவம் என்ற விழாவோடு இது நிறைவுபெறும்.
குறிப்பு: திருமலை நாயக்கர் மன்னருக்கு முந்தைய காலத்தில் இந்த மாசி மாதத்தில்தான் ஸ்ரீ மீனாக்ஷி கல்யாணம், திருத்தேர் உலா எனப்பெருவிழா நடைபெற்றிருக்கிறது. பங்குனி மாத விழா "உத்திரத் திருவிழா
சுவாமி சன்னதி கொடி மரத்தில் கொடியேற்றித்துவங்கும் இவ்விழா பத்து நாட்கள் நடைபெறும். சித்திரை வீதிகளில் அம்மையப்பர் எழுந்தருளி திரு உலா வைபவமும் நிகழும். அவ்வமயம் தெற்குச் சித்திரை வீதியில் அமைந்த வெள்ளியம்பல மண்டபத்திலும் எழுந்தருள்வர். அங்கு சைத்யோபாசாரங்களுடன் விசேட பூஜைகள் நிகழும். பத்தாம் நாள் இறுதி விழா தினத்தில் திருவாப்புடையார் கோயிலுக்கும், திருப்பரங்குன்றம் கோவிலுக்கும் எழுந்தருள்வார்கள்.
மேலும்
ஸ்ரீ ராஜ மாதங்கி
21. மதுரை திருக்கோவில் திருவிழாக்கள் »