Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மதுரையை ஆண்ட நாயக்கர் மன்னர்கள் மன்னர் திருமலை திருப்பணி
முதல் பக்கம் » ஸ்ரீ ராஜ மாதங்கி » 26. நாயக்கர் வரலாறு
நாயக்கர்களின் அரசாட்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2018
02:09

மதுரை நாயக்கர்கள் மதுரைப் பெருநாட்டை கி.பி. பதினாறாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்து கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை 207 ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள். அப்போதைய மதுரை நாடு என்பது இப்போது உள்ள மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம், கோயம்புத்தூர் மாவட்டங்களும், திருச்சிராப்பள்ளியும் அடங்கிய நாடாய் இருந்தன. இந்நாட்டை விஜயநகரப் பேரரசின் ஆளுநர்களாய் இருந்து ஆட்சி புரிந்தவர்கள் மொத்தம் 6 நாயக்கர்கள், அவர்கள் விஸ்வநாத நாயக்கரும் 1529-1564 முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கரும் 1564-1572 வீரப்ப நாயக்கரும் 1572-1595 இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கரும் 1595-1601 முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கரும் 1601-1609 முதலாம் முத்து வீரப்ப நாயக்கரும் 1609-1623 ஆவார்கள்.

ஏழாவது ஆட்சியாளராய் வந்த திருமலை நாயக்கர் 1623-1659 அப்போதைய தலைக்கோட்டைக் கோயில் தோற்றுச் சிதைந்து கிடந்த விஜய நகரப் பொம்மை பேரரசராய் இருந்த மூன்றாம் ஸ்ரீ ரங்கனோடு போராடி முழு உரிமை பெற்று அரசனானவர். இவர் விஸ்வநாதரை அடுத்து மிகுந்த புகழ் பெற்று விளங்கியவர். இவருக்குப் பின் இரண்டாம் முத்து வீரப்பர் 1659 முழு உரிமை அரசராய் நான்கு திங்களே ஆண்டு மாண்டார். இவருக்குப் பின் வந்த சொக்கநாத நாயக்கர் 1659-1682 மூன்றாம் முத்து வீரப்ப நாயக்கர் 1682-1689 ராணி மங்கம்மாள் 1689-1706 விஜய ரங்க சொக்க நாயக்கர் 1706-1732 மீனாக்ஷி அரசி 1732-1736 ஆகியவர்கள் முழு உரிமை அரசர்களாய் மாமதுரை நன்னாட்டை ஆண்டார்கள்.

விஸ்வநாதர் மதுரை நகரை தலைநகராய்க் கொண்டு நாட்டை ஆண்டார். திருமலை நாயக்கரும் மதுரையைக் கோ நகராய் கொண்டு மதுரைப் பெரும் நாட்டை சீரும் சிறப்புமாக ஆட்சி செய்தார். சொக்க நாதரும் முத்து வீரப்பரும் மங்கம்மாளும் விஜய ரங்க சொக்க நாதரும் ஸ்ரீ மீனாக்ஷி அரசியும் திருச்சிராப்பள்ளியைத் தலைநகராக் கொண்டு அங்கேயே இருந்து மதுரை நாட்டை ஆண்டார்கள். இவர்கள் மதுரை நகரில் இருந்து ஆட்சி செய்யவில்லை என்பது குறிப்பிடுவதற்குரியது.

சாந்தா சாகிப்பின் சதிக்கு இரையாகி நஞ்சுண்டு மாண்ட மீனாக்ஷி அரசியோடு 1736ல் மதுரை நாயக்கர் பரம்பரையே முடிவடைந்து விட்டது. மொத்தம் 13 மதுரை நாயக்கர்கள் மதுரைப் பெருநாட்டை ஆண்டார்கள். இவர்கள் அனைவரும் விஜயநகரத்தைச் சேர்த்து வடுகர்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். நாயக்க மன்னர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் செய்த முக்கிய திருப்பணிகள்.

முதல் நாயக்கர்:

விஜயநகரப் பேரரசரான புக்கர் என்பவரின் மகனான இரண்டாம் கம்பணரே முதன் முதலாக ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் கோவிலுக்குத் திருப்பணிகள் செய்து மதுரை நாயக்கர்களுக்கு வழிகாட்டியாய் இருந்தார். இக்கம்பணர் பாழ்பட்ட மதுரை மீனாக்ஷி யம்மன் கோவில் மதிற்சுவரை கட்டி முடித்தபின் முஸ்லீம் படையெடுப்பு காலத்தில் நாஞ்சில் நாட்டுக்குக் கொண்டு போயிருந்த இறைத்திருவுருவத்தை மீண்டும் மதுரைக்கு கொண்டு வரச் செய்து அதற்கு திருவாபரணங்கள் பல செய்தளித்து நாள்தோறும் வழிபாடு செய்வதற்காகத் திருவிளையாடல் கிராமத்தை விட்டுக் கொடுத்தார். இது பற்றி திருத்தாண்டவ மூர்த்திக் கவிராயர் இயற்றிய திருப்பணிமாலைச் செய்யுளில் இச் செய்தி வருகிறது.

"பின்னொரு காலம் திருக்காப்பு
நீக்கித்தன் பேரன்பினால்
முன்னுள ஊர்களும் பின் புதி
தாய் விட்டு முக்கணர்க்கு
மண்ணிய பூசை திருப்பணி
கூடல் வளரச் செய்தான்
கண்ணியும் பொண்ணியும் கங்கையும்
கெண்டருள் கம்பணனே

இத்திருப்பணிமாலை முக நூலை மதுரை தமிழ்ச்சங்கத்தால் பல ஆண்டில் பாண்டித்துரை தேவரால் வெளியிடப்பட்டது. என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

மன்னர் விஸ்வநாத நாயக்கர்:

1374க்கு முன் இரண்டாம் கம்பணரால் திருப்பணி செய்யப்பட்ட மதுரை மீனாக்ஷி யம்மன் திருக்கோயில் 1529ல் விஸ்வநாத நாயக்கர் மதுரை நகரில் இருந்து கொண்டு மதுரை நாட்டை ஆண்ட சமயம் பழுதுபட்டு கிடந்ததைக் கண்டு தமது கைப்பொருளைச் செலவு செய்து அக்கோவிலைப் புதுப்பிக்கும் பணி ஏற்றார். பல நகைகளையும் செய்து கொடுத்தார். அதற்கென சில ஊர்களையும் அளித்தார். இவ்விஸ்வநாதருக்கு மதியமைச்சராகவும், படைத்தலைவராகவும், இருந்த அரியநாத முதலியாரால்தான். மீனாக்ஷி யம்மன் கோவிலில் 1000 - 895 கால் மண்டபம் கட்டப்பட்டது. இதுவே இன்றைய கலைக் கூடமாகத் திகழ்கிறது.

மன்னர் முதலாம் கிருஷ்ணப்பர்:

பாளையங்கோட்டைக்கு அருகில் தம் பெயரால் கிருஷ்ணாபுரம் என்னும் நகரத்தை அமைத்து அங்கே திருவேங்கடநாதர் கோவிலை கட்டி அதற்கு இணையாகப் பல சிற்றூர்களை அளித்தார். அக்கோவிலுக்கு தேர் ஒன்றையும் செய்து கொடுத்தார். சிவன் கோவில் ஒன்றையும் கட்டினார். தெப்பக்குளத்தையும் வெட்டுவித்தார். இவர் மீனாக்ஷி யம்மைக் கோவிலிலும் பல திருப்பணிகள் செய்துள்ளார். வெள்ளியம்பலம், வடக்குக் கோபுரம், திருமடைப்பள்ளி, மூர்த்தியம்மன் மண்டபம், இரண்டாம் பிராகாரத் திருசுற்றுமண்டபம், கொடிமரத்திற்கு முன்னிருக்கும் வீரப்பர் மண்டபம் அமைத்தும், அம்மையின் மண்டபத் தூண்களுக்கும், அம்மைக்கும், பொற்கவசம் செய்தளித்தார். திருப்பணிமாலை "மத்தகப் போர் விஸ்வநாதர் குமாரன் மனுமுறைக்கு ஒத்துப்பார் புரக்கும் கிருஷ்ணபூபதி குணக்கொண்டல இத்திருப்பணிகளைச் செய்ததாய் விரிவாயும் திட்டவட்டமாயும் கூறுகிறது.

மன்னர் வீரப்ப நாயக்கர்:

தில்லைச் சிதம்பரத்தில் கூத்தப்பெருமானது திருக்கோவிலைச்சுற்றி வலிமை மிக்க மதிலை கட்டுவித்தார். ஸ்ரீ மீனாக்ஷி யம்மை திருக்கோவிலுக்கு இடப வாகனமும், பல்லக்கும், செய்து கொடுத்ததோடு மண்டபம் அமைந்த தோப்பும் அளித்தார்.

 
மேலும் ஸ்ரீ ராஜ மாதங்கி 26. நாயக்கர் வரலாறு »
காலம்        -    –    நாயக்க மன்னர்களின் பெயர்கள்கி.பி.1404        –    இலட்சுமண ... மேலும்
 
திருமலை நாயக்கர் பொதுவாக திருப்பரங்குன்றத்து முருகப்பெருமான் திருக்கோயில், திருமாலிருஞ்சோலை ... மேலும்
 
கி.பி. 1529-1564ல் மன்னர் விஸ்வநாத நாயக்கர் கோவில் நிர்வாகத்தை அபிஷேகப் பண்டாரம் வசம் ஒப்படைத்திருந்தார். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar