Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
1. நமது மதுரை இசைத்தூண்கள்
முதல் பக்கம் » ஸ்ரீ ராஜ மாதங்கி » 52. இன்னிசை எழுப்பும் இசைக்கற்தூண்கள்
கோயில்களில் கல்லும் பாடும், கவியும் கூறும் அதிசயங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 அக்
2018
03:10

பாண்டிய நாடு தமிழ் வளர்த்த பழம்பெரும் நாடு மட்டுமல்ல. இயல், இசை, நடனம் என்னும் முத்தமிழினையும் வளர்த்த நாடு. இஃதில் தெய்வீகத்தைப் போல் இசையையும் ஒழுக்கத்தையும் நல் உணர்வுகளையும் தூண்டவல்ல பேருணர்வுகளை உந்துதற்கு கோயில்களே பயன்படுத்தப்பட்டன. இங்கே முத்தமிழ் வளர்க்க மூன்று சங்கங்கள் முதல், இடை, கடைச் சங்கங்கள் இருந்தன என்றும் கூறுகின்றோம். சிவபெருமான் முதன்முதலாகப் பாண்டிய நாட்டில்தான் தனது படைப்புத் தொழிலைக் காட்டும் முனிதாண்டவத்தை ஆடி ""ஆடவல்லான் என்ற பெயரைப் பெற்றார். இங்கே தான் ஒப்புவமை இல்லாத குழல் தூண்களும், கல் நாதஸ்வரமும், இசைப் படிமங்களும் இசைத்தூண்களும் உள்ளன.

கருங்கல்லால் ஆன இசைக் கருவிகள் கால கதியினாலும், தட்பவெப்ப மாற்றத்தினாலும் விளையும் அழிவுகளை எல்லாம் எதிர்த்து நின்று இசைப்புலவர்கள் வரையறுக்க இசை நுட்பங்களை இன்னும் நமக்கு எடுத்துக்காட்டும் வண்ணம் விளக்காய் ஒளிர்கின்றன. இந்தியாவின் எப்பகுதியிலும் இத்துணை அற்புதமான பாடும் கற்களைப் பார்க்க முடிய வில்லை. எங்காவது ஒன்றிரண்டு தூண்கள் தென்பட்டாலும் அவைகள் எதுவும் பாண்டிநாட்டுப் பாடும் கற்களுக்கு ஒலிநிறைவிலோ, எழில் அமைதியிலோ ஒப்புவமைக் கூறக் கூடியதாக இல்லை. கை வண்ணம் வாய்ந்த கற்றுணர்ந்த தமிழ்நாட்டுச் சிற்பிகள் எதிரொலி கிளர்த்தும் கருங்கல் வகைகளை தேடிக் கண்டுபிடித்து அவைகளை நன்கு பரிசோதித்து அதினின்றே இசைப் படிமங்களையும், இசைத்தூண்களையும் உருவாக்கியுள்ளார்கள்.

இந்த இனிய ஒலியைக் கிளர்த்தும் கற்களினின்று ஒரு மெல்லிய சிறு துண்டை எடுத்து அதை உருப்பெருக்கி கண்ணாடியால் பரிசோதித்துப் பார்த்தபொழுது அதில் சில அபூர்வமான குறிகள் காணப்படுகின்றன. இதன் மூலம் எத்தகைய கற்கள் இசைத்தூண்களை உருவாக்குவதற்கு உபயோகப்பட்டிருக்க வேண்டும் என்று அறிய முடிந்தது. தட்டினால் பல்வேறு சுர ஒலிகளை எழுப்பும் தூண்களையே படிமங்களையே அமைக்கச் சாதாரணமான கற்களை உபயோகப்படுத்தவில்லை என்றும் அதற்கு உரிய கற்கள் முற்றிலும் வேறு உள என்றும், இதனால் அறியப்படுகின்றது. அதே சமயம் அவ்வாறு உருவாக்கப்பட்ட இன்னிசைக்கற்றூண்கள் தன்னை உருவாக்கிய சிற்பியின் புகழை காலந்தோறும் கூறிக்கொண்டே இருக்கும். இசைத்தூண்கள் பலவித அழகுதரும் பற்பல வடிவங்களில் பல வரிகளையும் கல் உருட்டுக்கம்பிகளையும் உடையதாய் பெரிய அளவில் காணப்பட்டாலும் இசை ஒரே கல்லில் செதுக்கப்பட்டிருக்கின்றன. இவை இணையில்லாத எடுத்துக் காட்டாக இலங்குவது.

நமது பாண்டிய நாட்டில் உள்ள மதுரை, திருநெல்வேலி, ஆழ்வார்திருநகரி, கிருஷ்ணாபுரம், செண்பகராமநல்லூர், தென்காசி, திருக்குற்றாலம், சுசீந்திரம் போன்ற தலங்களேயாகும். இது தவிர திருவானைக்காவல், தாடிக்கொம்பு, தாராசுரம், திருவனந்தபுரம், திருப்பதி, ஹம்பி, விஜயநகர், பெங்களூர், ராமராசன் கோட்டை முதலிய இடங்களிலும் இசைத்தூண்களும் இசைப்படிமங்களும் இருக்கின்றன. எனினும் இவைகள் பாண்டிய நாட்டின் பாடல் தூண்களுக்கு ஒப்பாகா......

பொதுவாக கல் இசைத்தூண்களின் நிறம், கருப்பாகவோ, வெண்மையாகவோ, சாம்பல் நிறமாகவோ இருக்கின்றன. இவை அனைத்தும் மொத்த வடிவில் சதுரமானதாகவும், புரிகள் உடையதாகவும் வட்டமானதாகவும் அறுங்கோணம், எண்கோணம் போன்றவனவாகவும் மொத்தத்தில் இத்தூண்கள் மூன்றடிக்கு மேல் ஆறடிக்குள் ஒப்பற்றதாகவும் இருக்கின்றன. குறிப்பாக அதனதன் வடிவத்தில் சம வடிவங்களாக உதாரணம் - வட்டமானது என்றால் சரியான வட்டமாகவும், சதுரமானது என்றால் சம பரப்பு உள்ள சம சதுரமாகவோ, அறுங்கோணம் என்றால் கோணத்திற்கு கோணம் அதன் பரப்பு பகுதி மிகச்சரியாக பங்கிட்டு உள்ள தோற்றத்திலும் அமைந்திருப்பது இதன் மற்றொரு சிறப்பு.

அக்காலத்தில் அளவு பிசகாமல் அமைப்பதற்கு எந்த கருவி அளவையை உபயோகித்திருப்பார்கள் என்று எண்ணத்தோன்றுகிறபோது மிகவும் வியப்பாகவும் சிற்பிகளின் அறிவு மற்றும் கையாண்ட சிற்ப சாஸ்திர மேதாவிலாசமும் பிரமிக்க வைக்கின்றன. கற்கட்டிடங்களில் மிகப்பெரிய அளவுள்ள மிகச்சிறிய நுணுகிய மற்றும் உயிரோட்டங்களின் ஊற்றுக்கண் எவ்வாறு கலைநயங்களை கடலெனப் பெருக வைத்தன என்பதை இக்காலத்தில் ஆராய்ச்சிக்கு உட்படுத்தலாமன்றி அறிந்து கொண்டோ அது போன்ற மற்றொரு பிரதி எடுக்கவோ ஒருபோதும் இயலாதென்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

இசைத்தூண்களை தட்டினால் ஓசை எழும். ஆனால் சில இசைத்தூண்களில் எழும் நாத ஒலி எதிரே இருக்கும் இசைத்தூண்களை தாக்கி அவைகளை அதிர வைக்கின்றன. அவ்வமயம் அவ்வாறு அதிரும் அத்தூண்களை விரல்களால் தொட்டுப்பார்த்தால் தூண்களின் ஒலி அசைவை நாம் உணரமுடியும் இந்த இடத்தில் என் சொந்த அனுபவத்தை இங்கு விவரிக்க முயல்கிறேன்.

அடியவன் ஆன டி.எஸ்.கிருஷ்ணன் ஆகிய நான் இது எவ்வாறெனில் ஒரே இடத்தில் பல வீணைகளை வைத்து அவ்வீணைகளில் ஒவ்வொன்றின் தந்திகளை நரம்புகள் அனைத்தையும் ஒருபோல சிறிதும் பிசகாமல் சுருதி சேர்த்து வைத்துப்பின் அவ்வீணைகளில் ஒன்றில் ஏதாவது ஒரு தந்தியை நரம்பை மீட்டினால் அடுத்து உள்ள அனைத்து வீணைகளிலும் உள்ள அந்த குறிப்பிட்ட தந்தியின் ஒலி தானாக ஒலிப்பதைக் கேட்கலாம். உணரலாம்.

கற்தூணின் நடுபாகத்தில் மட்டும் இந்த ஒலி அசைவு எழுவதில்லை. அந்த நடுப்பாகம் அமைப்பு முழுவதையும் தாங்கிக்கொள்வதற்கும் உறுதியைக் கொடுப்பதற்கும் உறுதுணையாய் மட்டும் உதவுவது. அது இசைச்சுரங்களின் எழுப்ப இயலாதவாறு கனமானதாகச் செய்யப்பட்டிருக் கிறது.

சில இசைத்தூண்களில் எப்பகுதி தட்டினாலும் ஒவ்வொன்றும் வெவ்வேறு சுரங்களைத் தருகிறது. இந்த இசைத்தூண்களின் விளிம்புகளில் அல்லது சுற்றுவட்டத்தில் நெடுகப் பகிர்ந்து கொள்கிறது. ஆழ்வார்த் திருநகரி, சுசீந்திரம் கோயில்களில் உட்பக்கம் சுற்றுவரிசையில் இசைத்தூண்களின் இரண்டாவது வரிசையும் உள்ளன.

இசைத்தூண்களின் நடுவட்டம், எல்லாதூண்களிலும் ஒரே அளவுடையவனதாகவே இருக்கின்றன. தட்பவெப்ப நிலைகள் தாக்கவெண்ணாதவாறு இவை நன்கு ஆய்ந்து அமைக்கப் பட்டிருக்கின்ற. இவைகட்கு எந்தவிதமான பழுதுபார்த்தலும் தேவைப்படுவதில்லை. இவைகள் எக்காலத்தும் தொடர்ந்து ஒரே அளவில் ஒரே சுருதியில் இனிய ஒலிகளை எழுப்பிக்கொண்டே இருக்கின்றன. உலகில் யாவும் எப்பொருளும் மாற்றத்திற்கு உட்பட்டவை என்பது உண்மை என்ற நிலையில் இத்தூண்கள் மட்டும் மாறாது இசை ஒலிப்பதும் அளவு மாறாமலும் இருப்பதின் ரகசியம் யாதோ? வீணை, யாழ், தம்புரு, மிருதங்கம் போன்ற இசைக்கருவிகளைப்போல் அடிக்கடி தந்திகளை உருக்கவோ, தோல்க் கருவிகளின் கட்டைகளை அடிக்கவோ, இருக்கவோ, மாவு போன்ற பசைகளைக் கூட்டவோ, குறைக்கவோ, மாற்றவோ வேண்டிய அவசியம் கற்தூண்களுக்கு எழுவதேயில்லை!!

ஒன்றின்மேல் மற்றொன்று தாக்கினால் தாக்கப்பட்ட பரமாணுவிற்குள் அசைவு உண்டாகிறது. அந்த அசைவால் அதைச்சூழ்ந்துள்ள காற்று அசைக்கப்படுகிறது. அசைக்கப்பெற்ற காற்றினால் ஒலியலைகள் நாலாபக்கங்களிலும் பரவி நமது செவியிலே நுழைகிறது. நமக்கு ஒலி உணர்ச்சி உண்டாகிறது. காற்றுடன் கூடிய ஒலியின் அசைவே ஒலி உணர்ச்சி உண்டாகிறது. காற்றுடன் கூடிய ஒலியின் அசைவே ஒலி உணர்ச்சிக்கு காரணம். அந்த ஒலி இசையாவது எப்போது? அந்த சொல் இசையுடன் கூடிய ஒலிதான் சங்கீதம் சங்கமிக்கும் இதம் ஒலியளவின் சமமான அளவே மாத்திரை-காலப்பிரமாணம் இசைக்குக்காரணம். இசைக்கு ஆதாரம் அதாவது காற்றசைவுகளின் இரண்டின் எடையில் உள்ள காலவரை ஒரே அளவுள்ளதாய் இருக்குமானால் இசை உண்டாகும். ஒலியின் மாத்திரை ஒரே அளவில் இல்லாத போது இசை உண்டாகாது. அபஸ்வரம் தான் உண்டாகும். கற்தூணைத் தட்டும்போது தாறுமாறான ஒலித்திரள் அன்றி அளவமைந்த இன்னிசை எழுவது வியப்புத்தானே?

 
மேலும் ஸ்ரீ ராஜ மாதங்கி 52. இன்னிசை எழுப்பும் இசைக்கற்தூண்கள் »
மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோவில் மொட்டைக் கோபுரத்திற்கு அருகிலே இசைப்புலவர்கள் அனைவராலும் ... மேலும்
 
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த நாங்குநேரி வட்டத்தில் செண்பகராமன் நல்லூர் என்று ஒரு சிற்றூர் ... மேலும்
 
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார் திருநகரி ஒரு உயர்ந்த வைணவத்தலமாகும். இங்குள்ள ஆதிபிரான் ... மேலும்
 
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலின் மண்டபத்தின் அமைப்பு அற்புதமானது. இந்த மாபெரும் மண்டபத்தில் தான் ... மேலும்
 
சுசீந்திரம் பாண்டிய நாட்டின் ஒரு பகுதி. இங்குள்ள தாணுமாலயன் கோயிலும், இசைத்தூண்கள் உள்ளன. இக்கோயிலின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar