சுசீந்திரம் பாண்டிய நாட்டின் ஒரு பகுதி. இங்குள்ள தாணுமாலயன் கோயிலும், இசைத்தூண்கள் உள்ளன. இக்கோயிலின் முன் உள்ள பெரிய மண்டபத்தை உருவாக்கியவர்கள் பேரூர் முத்துச்சாமி பிள்ளை வகையினர் ஆவார்கள். இம்மண்டபம் கி.பி 1548ல் கட்டி முடிக்கப்பட்டதாக இக்கோயில் சாசனங்கள் கூறுகின்றன. இங்கு வடக்குப் பிராதரத்தில் கால பைரவர் சன்னதிக்கு எதிரே இசைத்தூண்கள் நான்கு காணப்படுகின்றன. வடக்குப் பக்கத்து தூண்கள் ஒவ்வொன்றிலும் 24 சிறு உருட்டுக்கம்பிகள் உள்ளது. தென்பக்கத்துத் தூண்கள் ஒவ்வொன்றிலும் 35 உருட்டுக்கம்பிகள் உள்ளது. இந்த உருட்டுக்கம்பிகள் அடியில் சதுரமாகவும் மேலே எட்டுப்பட்டைகள் உள்ளனவாகவும் புரிகள் உள்ளனவாயும் இருக்கின்றன. இந்தத் தூண்கள் சிறந்த சிற்ப வேலைப்பாடுகள் உடன் மிக கம்பீரமாக காணப்படுகின்றன. இக்கோவிலில் உள்ள ஏட்டுச்சுவடுகளில் இம்மண்டபமும், இசைத்தூண்களும் கி.பி 1798 ஆம் ஆண்டில் கட்டப்பட்டதாகக் காணப்படுகின்றன. இந்த இசைத்தூண்கள் சுத்தமான சுர ஒலிகளைத் தருகின்றன. இதில் எழும் சுரஒலிகளைச் செவிமடுத்த இசைப்புலவர்கள் இத்தூண்களில் பிறக்கும் நாதம் சுத்தமாகவும் இனிமையாகவும் இருக்கின்றன என்று இயம்புகின்றார்கள்.
நமது சென்னைப் பல்கலைகழக அன்றைய வரலாற்றுத்துறை தலைமைப் போராசிரியர் டாக்டர் திரு.கே.கே. பிள்ளை சுசீந்திரம் கோவில் என்ற ஆங்கில நூலில் இசையின் இனிமையிலும் சிற்ப நுட்பங்களிலும் இந்த இசைத்தூண்களுக்கு நிகரான தூண்கள் வேறு எங்கும் பார்ப்பது அரிது எனப் புகழ்மாலை சூட்டியுள்ளார்கள். அத்தோடு நாம் அறிந்தவற்றில் இது திருநெல்வேலி இசைத்தூண்களுக்கு ஒப்பானது. பாண்டிய நாட்டின் இசைக் கருவூலங்களில் இணையற்ற மணிகள் பதித்து அணிகலாக இந்த இசைத்தூண்களும் மதிக்கத்தக்கனவாகும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
மேலும்
ஸ்ரீ ராஜ மாதங்கி
52. இன்னிசை எழுப்பும் இசைக்கற்தூண்கள் »