திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார் திருநகரி ஒரு உயர்ந்த வைணவத்தலமாகும். இங்குள்ள ஆதிபிரான் கோயில் பிரசித்தி பெற்ற ஒரு திருக்கோயில் ஆகும். இங்குள்ள வசந்த மண்டபத்தில் இரண்டு இசைத்தூண்கள் உள. இவ்விசைத்தூண்களை ஒரு சிறு மூங்கில் குச்சி கொண்டோ அல்லது சிறிய கல்தூண்களைக் கொண்டோ தட்டினால் இன்னொலிகள் எழுகின்றன. இசை வல்லுநர்கள் இதனைத் தட்டிப்பார்த்து ஏழு ஸ்வரங்கள் பிறக்கின்றன என்று கண்டுள்ளனர். இதில் எழும் சுர ஒலிகள் மணி ஒலிபோல் கணீர் என்று ஒலிக்கின்றது. இத்தூண்களில் எழும் சுரங்களைக் கொண்டு தமிழ்மறையைப் பாடமுடியும் என்று முடிவுகட்டுப்பட்டுள்ளது.
மேலும் இங்குள்ள தூண்களில் இரு துவாரங்கள் துளைகள் இடப்பட்டுள்ளன. இரு பக்கங்களிலும் இருவர் நின்று கொண்டு மாறிமாறி ஊதினால் செண்பகராமன் நல்லூர் குழல் தூணைப் போல் ஒரு பக்கம் சங்கொலியும் மற்றொரு பக்கம் இக்கால ஒலியும் எழுகின்றது. எனவே இத்தூண்கள் இசைத்தூண்கள் வரிசையில் மட்டுமல்ல. குழல்தூண்கள் வரிசையிலும் சேர்ப்பதற்கு உரியதாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கே கல்லாலான ஒரு நாதஸ்வரமும் இருக்கின்றது. இது இன்றும் ஊதப்பட்டு வருகின்றது. நமது நாட்டில் உள்ள மூன்று, நான்கு கல் நாதஸ்வரத்தில் இதுதான் சிறப்புடையது.
மேலும்
ஸ்ரீ ராஜ மாதங்கி
52. இன்னிசை எழுப்பும் இசைக்கற்தூண்கள் »