Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோயில்களில் கல்லும் பாடும், கவியும் ... 2. செண்பகராமன்நல்லூர் தூண் குழல்:
முதல் பக்கம் » ஸ்ரீ ராஜ மாதங்கி » 52. இன்னிசை எழுப்பும் இசைக்கற்தூண்கள்
1. நமது மதுரை இசைத்தூண்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 அக்
2018
03:10

மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோவில் மொட்டைக் கோபுரத்திற்கு அருகிலே இசைப்புலவர்கள் அனைவராலும் புகழப்படும் ஐந்து அரிய இசைத்தூண்கள் மிகக் கம்பீரமாக நிற்கின்றன. இங்கே இவை போன்ற பல இசைத்தூண்கள் இருந்திருக்க வேண்டும். அவைகள் நமது கவனக்குறைவால் அல்லது அவற்றின் அருமை தெரியாது பாதுகாக்கத் தவறியதால் பழுதுபட்டுப்போயின அல்லது படையெடுத்து வந்த கலைக்கண்களற்ற மிலேச்ச மன்னர்களால் ஒருவேளை நிர்மூலம் செய்யப்பட்டிருக்கலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது.

இனியேனும் தற்போது மீதமுள்ள இசைத்தூண்களை கவனமாகப் பாதுகாத்து அதனை எக்காலமும் இசை இருக்கின்றவரை இசையின் பெருமைகளையும் அதனை தற்போது வரை கற்றுத்தேர்ந்து அதை மானசீகமாக தமக்காகவும் இசை ரசிகர்களுக்காகவும் மதுரை தஞ்சை மற்றும் இசையை இறையின் அசைவாகக் கருதி அதற்கென வாழ்வோர்க்காகவும் சுருங்கக்கூறின் இசையுலக அனைத்து இசை மேதைகளுக்காகவும் ஏனைய மாந்தர்களுக்காகவும் இசையால் இசையும் இறைவனை வழிபட நாம் அதனை இசைத்தூண்களை நமது அனைத்து தமிழக கலைகளை காக்கும் வண்ணம் அவைகளை காப்பாற்றியே ஆக வேண்டும் . இன்றளவில் இங்கு காட்சியளிக்கும் இசைத்தூண்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பெரிய கல்லினின்றே செதுக்கப் பட்டிருக்கிறது.

இத்தூணின் நடுப்பாகம் பருத்திருக்கிறது. சுற்றிலும் சிறுதூண்கள் போல் 22 உருட்டுக்கம்பிகள் இணைந்துள்ளன. ஒரு தூண் முழுவதும் ஒரே கல்லில் ஆக்கப்பட்டிருக்கிறது என்பது பலருக்கும் பேராச்சரியத்தை விளைவிக்கிறது. இதன் நடுவே ஒரு பெரிய தூண் நிற்பது போலவும் அதைச் சுற்றி பல சிறிய தூண்கள் இணைந்த நிற்பது போலவும் செதுக்கப்பட்டுள்ளது. சிறுதூண்கள் 3 அங்குல கனத்தில் வட்டம், கோணம் சதுரம், வளைவு, எட்டுப்பட்டை முதலிய பற்பல வடிவங்களில் காணப்படுகின்றன. நடுவிலுள்ள பெரிய தூணின் அடிப்பாகம் சுமார் ஐந்தடி சதுரமும் ஒன்பதடி உயரமும் இருக்கலாம்.

இதில் எழும் சுரத்தின் கிளைக்சுரங்கள் பக்கத்தில் நிற்கும் இசைத்தூண்களில் இருந்தும் தாமாகவே ஒலிக்கிறது. இத்தூண்களில் துளைக்கருவிகளில் இருந்து தோன்றும் நாத ஒலிபோல சுரங்களைத் தரக்கூடிய தந்திரமான வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தூண்களின் உள்ளே சுருள்சுருளான காலியிடம் உள்ளன. இத்தூண்களில் மிகச்சுத்தமான ஏழுவகைச் சுரங்களும் அமுதம் போல் பிறக்கின்றன. இதை இங்கு வரும் மேனாட்டு இசை விற்பன்னர்கள் பியானோ கம்பங்கள் என்று போற்றுகிறார்கள். வடநாட்டு இசை வல்லுநர்கள் ஜகம் ஏற்றும் ஜலதரங்க ஸ்தம்பங்கள் அலை எறி நீரியம் என்று கூறுகிறார்கள். தமிழ்நாட்டு இசை மேதைகள் கல்-னில் செய்யப்பெற்ற வில், யாழ் என்று புகழ் மாலை சூட்டுகிறார்கள்.

தமிழ்நாட்டு தெய்வ கலைஞனான சிற்பியின் அதி அற்புத கை வண்ணத்தால் தூண்களிலே இருந்த சிற்ப வடிவங்களிலும் இன்னிசை எழுப்பப்பட்டன. மதுரைக் கோயிலில் உள்ள காதல் தெய்வமான இரதி தேவியின் சிலையில் விரல் கை முதலிய உறுப்புகளை தட்டினால் ச, ரி, க என்ற மூன்று ஸ்வரங்கள் எழுகின்றன. இதே போன்று திருவானைக்காவில் ஆடவல்லானின் செப்புபடிவத்தில் கூடச் சில சுரங்கள் அரும்புகின்றன. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டு பத்திரிக்கைகள் வெளியிட்ட பல்வேறு மலர்களில் இதைப் பற்றி சில அறிஞர்கள் கட்டுரைகள் எழுதியுள்ளார்கள். அப்பால் நமது தமிழ்நாட்டு இசை வல்லுநர்கள் குறிப்பாக நமது மதிப்பிற்குரிய இசை மேதை பி. சாம்பமூர்த்தி அவர்கள் இசைத்தூண்கள் அனைத்தையும் நேரில் போய் பார்த்துத் தனது கட்டுரைகளிலும் நூல்களிலும் விளக்கி இதற்கு ஒரு மகோன்னதமான நிலையை அக்காலத்தே அளித்துள்ளார்கள். இக்கற்களில் ஏழு ஸ்வரங்களும் எழுவதைக் கண்டும் கேட்டும் இக்கலை உயிர்க்கலை என்று நாம் உறுதிபடுத்தி இசை உணர்வு பெறுவோம்.

 
மேலும் ஸ்ரீ ராஜ மாதங்கி 52. இன்னிசை எழுப்பும் இசைக்கற்தூண்கள் »
பாண்டிய நாடு தமிழ் வளர்த்த பழம்பெரும் நாடு மட்டுமல்ல. இயல், இசை, நடனம் என்னும் முத்தமிழினையும் வளர்த்த ... மேலும்
 
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த நாங்குநேரி வட்டத்தில் செண்பகராமன் நல்லூர் என்று ஒரு சிற்றூர் ... மேலும்
 
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார் திருநகரி ஒரு உயர்ந்த வைணவத்தலமாகும். இங்குள்ள ஆதிபிரான் ... மேலும்
 
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலின் மண்டபத்தின் அமைப்பு அற்புதமானது. இந்த மாபெரும் மண்டபத்தில் தான் ... மேலும்
 
சுசீந்திரம் பாண்டிய நாட்டின் ஒரு பகுதி. இங்குள்ள தாணுமாலயன் கோயிலும், இசைத்தூண்கள் உள்ளன. இக்கோயிலின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar