எல்லாரும் சேர்ந்து உண்பதற்கு ’பந்தி’ என பெயர். இந்த பெயர் எப்படி வந்தது தெரியுமா? வடமொழியில் ’பங்க்தி’ என்பது தமிழில் ’பந்தி’ என்றானது. ’பங்க்தி’ என்றால் ’சேர்ந்து உண்ணுதல்’. மனத்தூய்மையான ஒருவர் பந்தியில் இருந்தால் பரிமாறும் உணவு முழுவதும் பரிசுத்தமாகி விடும். அவரை ’பங்க்தி பாவனர்’ என சொல்வர். நம்முடன் சேர்ந்து உண்பவரின் குணம் கூட உணவின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்கிறது ஆன்மிகம். எனவே நல்லெண்ணத்துடன் வாழ்வது நம் எல்லோருக்குமே நல்லது.