அம்பிகைக்கு ’விச்வ ஸாக்ஷிணீ’ என்று பெயருண்டு. ’விச்வம்’ என்றால் ’உலகம்’. ’ஸாக்ஷிணீ’ என்றால் ’சாட்சியாக இருப்பவள்’. உலக உயிர்களின் செயல்கள் அனைத்திற்கும் அம்பிகையே சாட்சியாக இருக்கிறாள் என்பது இதன் பொருள். அவளுக்கு எங்கும் கண்கள் நிறைந்திருப்பதால் ’ஸர்வ தோக்ஷ’ என்றும், தமிழில் ’ஆயிரம் கண்ணுடையாள்’ எனவும் அழைப்பர். அவளின் பார்வையில் இருந்து தப்ப முடியாது. இதை உணராமல் அதர்மவழியில் நடந்தால் காளி வடிவெடுத்து அழித்து, தர்மத்தை நிலைநாட்டுவாள்.