பதிவு செய்த நாள்
09
பிப்
2012
11:02
சேலம்: தாசநாயக்கன்பட்டி காளியம்மன் கோவிலுக்கு தர்மகர்த்தா பூட்டு போட்டுச் சென்றதால், பொதுமக்கள் ரோட்டில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். அதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தாசநாயக்கன்பட்டி மெயின்ரோட்டில், சக்தி காளியம்மன் கோவில் உள்ளது. கோவிலில், அப்பகுதியை சேர்ந்த அனைத்து தரப்பு மக்களும் வழிபட்டு வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, கோவில் பூசாரி பிரகாஷ் என்பவர், கோவிலில் இருந்து வீட்டு பயன்பாட்டுக்கு மின்சாரத்தை எடுத்துள்ளார். மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்ததில் முறைகேடு உறுதி செய்யப்பட்டது. பூசாரிக்கு பிரகாஷுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். கோவில் தர்மகர்த்தா குமார், திடீரென்று நேற்று கோவிலை பூட்டி சாவியை எடுத்துச் சென்றுவிட்டார். கோவில் விழாவை நடத்த முடியாததால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதே பகுதியை சேர்ந்த சேகர் என்பவரது வீட்டு முன்பு, சாமிக்கு பூஜை செய்து விட்டு, ரோட்டிலேயே, பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். இரவு நேரத்தில், பொதுமக்கள், ரோட்டில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்திய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.