அட்ட வீரட்டானங்களில் ஒன்றான திருக்கோவிலுார்‚ கீழையூர்‚ வீரட்டானேஸ்வரர் கோவிலில்‚ ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு‚ மூலவர் வீரட்டானேஸ்வரர்க்கு அன்னாபிஷேகம் நடந்தது. மாலை 4:00 மணிக்கு‚ பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷகம்‚ அலங்காரம் நடந்தது. தொடர்ந்து 6:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர் சாதம்‚ காய்கனிகளால் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். சிவபுராணம் வாசிக்கப்பட்டு‚ சிவகோஷத்திற்கிடையே சோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது. இரவு 8:00 மணிக்கு‚ அலங்காரம் கலையப்பட்டு‚ விக்னேஷ்வரபூஜை‚ புண்யாகவாசனம்‚ பஞ்சாசனபூஜை‚ பஞ்சஆவரனபூஜை‚ மகா அபிஷேகம்‚ தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகிக்கப் பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.