பதிவு செய்த நாள்
31
அக்
2018
11:10
திருப்பூர்: திருப்பூர், ராயபுரம், மத்திய வீதியில் உள்ள பூமி நீளா சமேத ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்து, 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனால், திருப்பணிகள் பணிகள் துவங்கின. ராஜகோபுரம் மற்றும் சொர்க்க வாசல் கோபுரம் ஆகியன புதிதாக கட்டப்பட்டுள்ளன. மேலும், ஆண்டாள் மற்றும் ஆஞ்சநேயர் சன்னதி, கோபுரம் புதுப்பிக்கப்பட்டு, மூலவர் கருவறையில் கல் வேலைகளும், கிரானைட் கற்கள் பதிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டன. இந்த திருப்பணி நிறைவுற்றதால், கோபுரம் மற்றும் சிற்பங்கள் வர்ணம் தீட்டும் பணி நடந்து வருகிறது.
இது குறித்து ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் பக்தர் சங்க தலைவர் வக்கீல் வீரராகவன், துணை தலைவர் வெங்கடபதி, செயலாளர் கார்த்திகேயன் கூறியதாவது: பக்தர்கள் ஒத்துழைப்புடன் கோவில் திருப்பணி முழுமயைடையும் தருவாயில் உள்ளது. வரும், 19ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. முன்னதாக 17ம் தேதி வாஸ்து சாந்தி, 18ம் தேதி முதல் கால யாக பூஜை, பூர்ணாகுதி நடக்கிறது. வரும், 19ம் தேதி காலை 6:00 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடும், 9:15 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் தொடர்ந்து தச தரிசன நிகழ்வும் நடைபெறும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.