கம்மாபுரம் இருப்பு கருப்புசாமி கோவிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19நவ 2018 12:11
கம்மாபுரம்: இருப்பு கருப்புசாமி கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.கம்மாபுரம் அடுத்த இருப்பு கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் (17ம் தேதி) மாலை 3:00 மணிக்கு கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, கும்ப பூஜை, யாக சாலை பிரவேசம், முதல்கால பூஜை, மகா தீபாராதனை நடந்தது.
நேற்று (நவம்., 18ம் தேதி) காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, கோ பூஜை, நாடிசந்தானம், காலை 9:00 மணியளவில் கடம் புறப்பாடு, 9:30 மணியளவில் கோவில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, வினாயகர், முருகர், ஸ்ரீபூரணி பொற்கலை, ஐயனார் சன்னதிகளில் கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.