பதிவு செய்த நாள்
19
நவ
2018
12:11
பாக்பாத் : உத்தர பிரதேசத்தில், 1,800 ஆண்டுகள் பழமையான உ.பி., மாநிலம் பாக்பாத் மாவட்டத்தில் செம்பு நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன.
உ.பி., மாநிலம் பாக்பாத் மாவட்டத்தில் உள்ள கப்ரானா கிராமத்தில், சமீபத்தில், 4,000 ஆண்டுகள் பழமையான, தேர், சவப்பெட்டி, போர் ஆயுதங்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப் பட்டன. இது குறித்து, தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். உ.பி.,யில் மகாபாரத காலத்துடன் தொடர்புடைய பல பொருட்களையும், தொல்லியல் துறையினர் ஏற்கனவே கண்டெடுத்துள்ளனர்.
இந்நிலையில், கப்ரானா கிராமத்தில் உள்ள மலைப் பகுதியில், உள்ளூர் மக்கள் தோண்டிய போது, பழமையான செம்பு நாணயங்கள் கிடைத்தன. இதையடுத்து, அந்த பகுதியில் தொல்லியல் துறையினர் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டனர்.
அப்போது, குஷான் அரச வம்சத்தைச் சேர்ந்த, மன்னர் வசுதேவர் காலத்தில் பயன்படுத்தப் பட்ட, செம்பு நாணயங்கள் கிடைத்தன. தலா, 8 கிராம் எடையுள்ள, பல சித்திரங்களுடன், இந்த நாணயங்கள் இருந்தன. இந்த நாணயங்கள், 1,800 ஆண்டுகள் பழமையானவை என, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.