பதிவு செய்த நாள்
20
நவ
2018
12:11
திண்டிவனம்: திண்டிவனம், அரசு போக்குவரத்து கழக பணிமனையில் அமைக்கப்பட்டுள்ள வழித்துணை விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம் (நவம்., 18ல்) மாலை விநாயகர் யந்திர பிரதிஷ்டை, கோபுர கலச பிரதிஷ்டை நடந்தது.தொடர்ந்து நேற்று (நவம்., 19ல்) அதிகாலை 4.00 மணிக்கு யாக சாலை பூஜையும், 9.00 மணிக்கு பூர்ணஹூதி, தீபாராதனை, கலச புறப்படு நடந்தது. காலை 9.30 மணிக்கு விமானத்திற்கு கும்பாபிஷேகம் மற்றும் மூலஸ்தானத்திற்கு கும்பாபிஷேகமும் நடந்தது.
கும்பாபிஷேகத்தில் டி.எஸ்.பி., திருமால், போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர் பழனி, ஒலக்கூர் ஒன்றிய அ.தி.மு.க.,செயலர் ராஜேந்திரன், அ.தி.மு.க.,தொழிற்சங்க நிர்வாகி காமராஜ், மற்றும் அனைத்து போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.