வாலாஜாபேட்டை: உலக மக்கள் நன்மைக்காக, வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், நேற்று(நவம்., 26ல்), ஒரு கோடி தாமரை மலர்களால் பைரவர் யாகம் நடந்தது. முரளிதர சுவாமிகள் தலைமையில் நடந்த யாகத்தை தொடர்ந்து, சொர்ண யாகம், குபேர யாகம், லஷ்மி யாகம் நடந்தது. இதில் பங்கேற்றவர்களுக்கு நவதானியம் பிரசாதமாக வழங்கப்பட்டது.