பதிவு செய்த நாள்
27
நவ
2018
02:11
திருத்தணி: திருத்தணி, பழைய தர்மராஜா கோவில் தெருவில், மனோன்மணி உடனுறை சதாசிவ லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், உலக நன்மைக்காகவும், மழை பெய்ய வேண்டியும், சொர்ணா அஷ்ட பைரவர் மஹா யாகம், 30ம் தேதி நடைபெறுகிறது.இதற்காக, கோவில் வளாகத்தில், ஒரு யாகசாலை, 108 கலசங்கள் வைத்து, அன்று காலை, 8:00 மணிக்கு, கணபதி ஹோமம், கலச ஸ்தாபனம் மற்றும் கலச பூஜை நடக்கிறது.மாலை, 6:00 மணிக்கு, பைரவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடைபெறும்.