திருத்தணி: திருத்தணி, மேட்டுத் தெருவில் உள்ள வீரஆஞ்சநேயர் கோவிலில், கார்த்திகை மாதம் பிரதி திங்கட்கிழமையில் மூலவருக்கு, 108 பால்குட அபிஷேகம் நடந்து வருகிறது.
அந்த வகையில், நேற்று (நவம்., 26ல்), திங்கட்கிழமை என்பதால், 108 பால்குட ஊர்வலம் மற்றும் அபிஷேகம் நடந்து வருகிறது. நேற்று, காலை, 9:00 மணிக்கு, 108 பக்தர்கள் பால்குடம் தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக கோவில் வளாகத்திற்கு வந்தனர். பின், மூலவருக்கு 108 பால்குட அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் வழிபட்டனர்.