திட்டக்குடி: திட்டக்குடி மஸ்ஜிதே ரஹமத் பள்ளி நிர்வாகம் மற்றும் கடலூர் மாவட்ட ஜமா துல் உலமா சபை சார்பில் மிலாதுநபி விழா கொண்டாடப்பட்டது.விழாவிற்கு, திட்டக்குடி மஸ்ஜிதே ரஹமத் பள்ளி வாசல் முத்தவல்லி சலீம் தலைமை தாங்கினார்.
கடலூர் மாவட்ட ஜமால்துல் உலமா மவுலானா ஷபியுல்லா மன்பா ஈ, துவக்கி வைத்தார். துணை முத்தவல்லி ஜான்பாஷா, செயலர் அப்துல் அஜீஸ் மற்றும் நிர்வாகக்குழு உறுப் பினர்கள் முன்னிலை வகித்தனர்.நிர்வாக உறுப்பினர் டாக்டர் நாகூர்கனி வரவேற்றார். கடலூர் வடக்கு மாவட்ட உலமாக்கள் அணி மவுலானா நஜீருல்லாஹ் மிஸ்பாஹி தொகுப் புரையாற்றினார்.
ஜமாதுல் உலமா வட்டார தலைவர் அல்ஹஜ் அப்துல்கனி, ஜமாதுல் விருத்தாசலம் வட்டார செயலர் முகமது உஸ்மான், அகில இந்திய முஸ்லீம் லீக் கொள்கை பரப்பு செயலர் ஷாகுல்அமீது, மங்கலம்பேட்டை வட்டார பொருளாளர் ஹபீப் முகமது வாழ்த்தி பேசினார். திருச்சி கருமண்டபம் ஜும் ஆ பள்ளிவாசல் தலைமை இமாம் ஜலாலுதீன் மிஸ்பாஹி, கொள்ளுமேடு ஜாமியா மஸ்ஜித் முன்னாள் இமாம் ஷைபுதீன் மன்பா ஈ சிறப்புரையாற்றினர். திட்டக்குடி அஸ்கர்அலி, மதராஸா மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். த.மு.மு.க., கடலூர் வடக்கு மாவட்ட துணைச்செயலர் சாகுல்அமீது நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.திட்டக்குடி அய்யூப்கான் நன்றி கூறினார்.