பதிவு செய்த நாள்
30
நவ
2018
12:11
மதுரை, சபரிமலை ஐயப்பனை காண கார்த்திகையில் மாலை அணிந்து ஒரு மண்டலம் 48 நாட்கள் விரதம் இருந்து, எருமேலியில் பேட்டை துள்ளி தர்மசாஸ்தா, ஐயப்பனின் தோழன் வாபரை தரிசனம் செய்யும் போது கிடைக்கும் பேரானந்தத்திற்கு அளவே இல்லை, என பக்தர்கள் மெய்சிலிர்த்தனர்.
எருமேலியில் பேட்டை துள்ளல் குறித்து தங்களின் ஆன்மிக அனுபவங்களை பக்தர்கள் பகிர்ந்து கொண்டதாவது:ஆந்திர மாநிலம் காளஹஸ்தி வெங்கடராமன் சபரிமலையில் ஐயப்பன் பிரம்மச்சாரி கோலம் பூண்டு அருள் பாலிக்கிறார். ஐயப்பனை காண மண்டல, மகர விளக்கு காலங்களில் பக்தர்கள் கடும் விரத முறைகளை கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும், என்பது ஐதீகம். இதன் காரணமாகவே மற்ற கோயில்களுக்கு செல்லும் பக்தர்களை போல் அல்லாமல் சபரிமலை செல்லும் ஆண் பக்தர்களுக்கு தனி அடையாளம் உண்டு. ண்களுக்கு ஐயப்பன் அருள் பாலிக்க மாட்டார் என அர்த்தம் இல்லை. ஆனால், செல்வதற்கான வயது வரம்பு சபரிமலையில் உண்டு. இடைப்பட்ட காலங்களில் ஐயப்பனை மனதார வணங்கி வருவதை உண்மையான பெண் பக்தர்கள் தங்களின் பெரும் பாக்கியமாக கருதுகின்றனர். எருமேலியில் பேட்டை துள்ளலில் கிடைக்கும் பேரானந்தத்திற்கு அளவே இல்லை.
ஐயப்ப மொழிமதுரை சித்தையா: அனைத்து மாநில பக்தர்களின் ஒரே ஐயப்ப மொழி என்பது ஐயப்ப பக்தர்களுக்கு மட்டுமே உரித்தானது. சபரிமலையில் எத்திசையிலும் ஒலிக்கும் ஒரே மந்திரம் சாமியே சரணம் ஐயப்பா மட்டுமே. நான் கடந்த 35 ஆண்டுகளாக சபரிமலைக்கு வருகிறேன். எனது வழிபாட்டில் எருமேலியில் பேட்டை துள்ளுவது முக்கியமானது. உடல் முழுவதும் வர்ணம் பூசி, கத்தி, ஈட்டி, கதாயுதத்தை துாக்கி கொண்டு எருமேலி சாலையில் தன்னை மறந்து ஆடிப்பாடி சென்று தர்மசாஸ்தா, வாபரை வழிபடுவது ஒரு ஆன்மிக வரப்பிரசாதம்.தெய்வ குற்றம்தர்மபுரி சரவணன்: நான்கு நாட்கள் பயணமாக நுாறு பக்தர்களுடன் சபரிமலை புறப்படுவது வழக்கம். பயணத்தின் இரண்டாம் நாள் எருமேலியில் பேட்டை துள்ளல் கட்டாயம் இடம் பெறும். அன்று இரவு பம்பை சென்று புனித நீராடி இருமுடி ஏந்தி சபரிமலை புறப்படுவோம். ஐயப்பன் சூரனை வதம் செய்ய காட்டுக்குள் புறப்படும்போது எருமேலியில் தனது நண்பர் வாபருடன் பேட்டை துள்ளினார் என்பது ஐதீகம். அதன் ஞாபகமாக தொடர்ந்து 31வது ஆண்டாக எருமேலியில் பேட்டை துள்ளி வருகிறோம். இதில் வழிபாட்டு திருப்தி, நம்பிக்கை, ஆனந்தம் கிடைக்கிறது. வழிபாட்டு முறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பது இதன் நோக்கம். சபரிமலையில் ஐயப்பன் பிரம்மச்சாரியாக கோலம் பூண்டுள்ளதால் குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் வரக்கூடாது என்பது முன்னோர் தோற்று வித்த விரத முறைகள். இதை மீறுதல் தெய்வ குற்றமாகும். சபரிமலை வழிபாட்டு முறைகள் பாரம்பரியம் மிக்கது. அது ஒரு போதும் மீறுதல் கூடாது.