பிழைப்புக்கு வெளிநாடு போகாத இளைஞர்கள். மணல் கொள்ளையடிக்காத அரசியல்வாதிகள். சாலை விதிகள் மதிக்கப்படுதல். செல்போன் கலாச்சாரத்தால் குறைந்த சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கையை மீண்டும் அதிகரிக்க முயற்சி. ஓட்டைகள் இல்லாத சட்டம். கடன் இல்லாத பாரதம். இயற்கை விவசாயம் செய்யும் உழவர்கள். எதற்கும் முறையாக வரிசையில் நிற்கும் பழக்கம். காலாவதி ஆன மருந்துகள் விற்காத கம்பெனிகள். கருப்புப் பணம் இல்லாத பாரதம். தீவிரவாதம் இல்லாத பாரதம். இலவசங்களைக் காட்டினாலும் ஏமாறாத மக்கள். பல நாட்டவர்க்கும் வேலைவாய்ப்பு நல்கும் பாரதம். நோயாளிகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும், குழந்தைகளுக்கும் தொல்லை தராத கட்சி ஊர்வலங்கள். ஒழுக்கமான, சுயநலமற்ற தலைவர்கள். பிச்சைக்காரர்கள் இல்லாத பாரதம். இறைசன்னிதானத்தில் எல்லோரையும் சமமாக நடத்துதல். இலவசங்களைக் காட்டி ஓட்டு வாங்காத கட்சிகள். அனைவருக்கும் அடிப்படைச் சட்ட அறிவு. நெரிசல் இல்லாத பேருந்து வசதி. மதுக்கடை இல்லாத தெருக்கள். சூரிய சக்தியை நன்கு பயன்படுத்தும் பாரதம். உலகம் வெப்பமாதலைத் தடுக்கும் மக்கள்.- இவையே நமது பாரதத்திற்கு மிகவும் முக்கியமான தேவையாகும்.