விழுப்புரத்தில் இருந்து திருவானைக்காவலுக்கு, விஜயேந்திரர் பயணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06டிச 2018 12:12
விழுப்புரம்: விழுப்புரத்தில் இருந்து திருவானைக்காவலுக்கு, காஞ்சி பீடாதிபதி விஜயேந்திரர் நேற்று (டிசம்., 5ல்)புறப்பட்டு சென்றார்.திருச்சி அருகே உள்ள திருவானைக்காவல் அகிலாண்டீஸ்வரி ஜம்புகேஸ்வரர் கோவிலில் வரும் 9ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.
இந்த விழாவில், பங்கேற்க காஞ்சி பீடாதிபதி விஜயேந்திரர் சுவாமிகள் சென்றார். திருவானைக் காவல் செல்லும் வழியில், விழுப்புரம் சங்கரமடத்திற்கு கடந்த 2ம் தேதி வருகை தந்தார். அங்கு, கடந்த 3 மற்றும் 4ம் தேதி சந்திரமவுலீஸ்வரர் பூஜை, பிரதோஷ பூஜைகளை நடத்தினார்.
நேற்று (டிசம்., 5ல்) காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை சந்திரமவுலீஸ்வரர் பூஜை நடத்தினார். பின், மாலை 4:00 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து திருவானைக்காவலுக்கு புறப்பட்டு சென்றார்.