Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) எதிர்பாராத வருமானம் மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ... ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசிரீடம் 1,2) உடல்நிலையில் திருப்தி ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, ...
முதல் பக்கம் » சித்திரை ராசிபலன் (14.4.2019 முதல் 14.5.2019 வரை)
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) எதிர்பாராத வருமானம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 டிச
2018
10:43

இந்தமாதம் முற்பகுதியில் முயற்சியில் வெற்றி உண்டாகும். பொன், பொருள் சேரும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும். இதற்கு காரணம் புதன் 8-ம் இடத்தில் இருப்பதே. அவர் டிச.29ல் தனுசு ராசிக்கு மாறுவதால் நற்பலன் தர வாய்ப்பில்லை. சுக்கிரன் ஜன.1ல் விருச்சிக ராசிக்கு இடம் மாறி நன்மை தருவார். வீட்டில் ஆடம்பர வசதிகள் பெருகும். ஆனால் சூரியன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் சிலர் பொல்லாப்பைச் சந்திக்க நேரிடும். கடந்த மாதம் நற்பலன் அளித்த செவ்வாய் டிச.17ல் சாதகமற்ற இடத்திற்கு செல்கிறார். இதனால் பணவிரயம் ஏற்படலாம்.  

குடும்பத்தில் மாதத்தின் முற்பகுதியில்  திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். தம்பதியினரிடையே அன்பு மேம்படும்.   டிச.18,19 ஜன.14ல் சகோதரிகள் மிக உதவிகரமாக செயல்படுவர். அவர்களால் நற்சுகம் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள்.  டிச.25,26ல் உறவினர் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். அதே நேரம் ஜன.10,11ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். டிச.29க்கு பிறகு சிலர் வீண்பொல்லாப்பை சந்திக்கலாம். பொறுமையுடன்  விட்டுக் கொடுத்து போகவும்.

பணியாளர்கள்  டிச.29 வரை நல்ல வளர்ச்சி காண்பார்கள். வேலையில் திருப்தி உண்டாகும். மேல் அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். அதன் பிறகு பணிச்சுமை கூடும். உங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும். ஜன.1க்கு பிறகு சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். ஜன.7,8,9ல் எதிர்பாராத நன்மை நடக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம் வியாபாரிகள் மாதத்தின் முற்பகுதியில் எதிர்பாராத வருமானம் கிடைக்கப் பெறுவர். ஆனால் சனிபகவானால் தடைகள், எதிரிகளின் இடையூறு  தலைதூக்கலாம். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகலாம். பெண்கள் வகையில் ஏற்பட்ட தொல்லை ஜன.1 க்கு பிறகு மறையும்.  உங்களுக்கு தீங்கு செய்தவர்கள் தவறை உணர்ந்து பரிகாரமாக உதவ முன்வருவர்.  டிச. 29,30ல் திடீர் பணவரவுக்கு வாய்ப்புண்டு. டிச.16,17,20,21,22, ஜன.12,13ல் சந்திரனால் சிறுதடைகள் வரலாம்  கலைஞர்களுக்கு ஜன.1க்கு பிறகு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.  சகபெண் கலைஞர்கள் உதவிகரமாக இருப்பர்.  அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான நிலை வளர்ச்சி காண்பர்.  

மாணவர்களுக்கு குருபகவான் நிலையற்ற தன்மையைக் கொடுப்பார். வீண்விரோதத்தை உருவாக்குவார். சிலர் கெட்ட சகவாசத்திற்கு ஆளாகலாம். எனவே நட்பு விஷயத்தில் எச்சரிக்கையுடன் பழகவும். அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஆனால் டிச.28 வரை புதன் சாதகமான நிலையில் இருப்பதால்  போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும்.  

விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆனால் வருமானத்திற்கு குறைவிருக்காது.  வழக்கு, விவகாரங்களில் முடிவு சுமாராக இருக்கும். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம். புதிய சொத்து வாங்க நினைப்பவர்கள் டிச.17க்குள் பயன்படுத்திக் கொள்ளவும். பெண்கள் மகிழ்ச்சிகரமாக காணப்படுவர். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.  பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் சேரும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான வளர்ச்சி பெறுவர். ஜன.1க்கு பிறகு கையில் பணம் புழங்கும்.  அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். டிச.23,24ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம்.

* நல்ல நாள்: டிச.18, 19, 23, 24, 29, 30, 31, ஜனவரி 1, 7, 8, 9, 10, 11, 14
* கவன நாள்: ஜன.2,3,4 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 4, 6
* நிறம்: பச்சை, வெள்ளை

பரிகாரம்:
● சனிக்கிழமை சனீஸ்வரர் வழிபாடு
● வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு தீபம்
● ஞாயிறன்று  நீராடியதும் சூரிய நமஸ்காரம்

 
மேலும் சித்திரை ராசிபலன் (14.4.2019 முதல் 14.5.2019 வரை) »
temple
பொதுநலனில் அக்கறை கொண்ட மேஷ ராசி அன்பர்களே!

ராகு உங்கள் ராசிக்கு 3ல் அமர்ந்தும், குரு 9ல் ... மேலும்
 
temple
நல்லதை சிந்திக்க விரும்பும் ரிஷப ராசி அன்பர்களே!

இந்த மாதம் 10-ம் இடத்தில் இருக்கும் சுக்கிரன் ... மேலும்
 
temple
திட்டமிட்டு பணியாற்றும் மிதுன ராசி அன்பர்களே!

ராசிக்கு 7ம் இடத்தில் இருக்கும் குருவும், 11-ல் ... மேலும்
 
temple
கண்ணியம் தவறாத கடக ராசி அன்பர்களே!

உங்களுக்கு இந்த மாதம் வளர்முகமான காலம். சூரியன் சாதகமான ... மேலும்
 
temple
மனதாலும் தீங்கு செய்யாத சிம்ம ராசி அன்பர்களே!

இந்த மாதம் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் உள்ள குரு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.