பதிவு செய்த நாள்
26
டிச
2018
03:12
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட சர்ச்சுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது.சருகணி அருகே செக்ககுடி மிக்கேல் அதிதூதர் சர்ச்சில் பிஷப் சூசைமாணிக்கம் தலைமையில் நேற்றுமுன்தினம் (டிசம்., 24ல்) இரவு சிறப்பு திருப்பலி நடந்தது.
பங்கு பாதிரியார் சூசைமாணிக்கம் முன்னிலை வகித்தார். சிவகங்கை அலங்கார அன்னை சர்ச்சில் பங்கு பாதிரியார் மரியடெல்லஸ் தலைமையில், காளையார்கோவில் அருளானந்தர் சர்ச்சில் பங்கு பாதிரியார் சூசைஆரோக்யசாமி தலைமையில், சூசையப்பர்பட்டினம் சூசையப்பர் சர்ச்சில் பாதிரியார் தமிழ்ச்செல்வன் தலைமையில் பங்கு பாதிரியார் டேவிட் குழந்தைநாதன் முன்னிலையில் திருப்பலி நடந்தது.
சருகணி திருஇருதயங்களின் சர்ச்சில் பங்கு பாதிரியார் அம்புரோஸ் தலைமையில், ஆண்டிச்சியூரணி அடைக்கல அன்னை சர்ச்சில் பங்கு பாதிரியார் பிரான்சிஸ் தைரியநாதன் தலைமையில் திருப்பலி நடந்தது. இரவு முழுவதும் நடந்த பிரார்த்தனையில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
* மானாமதுரை: மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா பள்ளி நிறுவனர் ராஜேஸ்வரி தலைமையில் நடந்தது.
விழாவை ஒட்டி பள்ளியில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப் பட்டிருந்தது. மாணவர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து வந்திருந்தனர். தாளாளர் கபிலன் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பரிசு,இனிப்பு வழங்கினார்.முதல்வர் கணேசன் நன்றி கூறினார்.
*இடைக்காட்டூர்: திரு இருதய ஆண்டவர் சர்ச்,மானாமதுரை ஆர்.சி.,சர்ச், சி.எஸ்.ஐ.,சர்ச், கேப்ரனூர் சர்ச் ஆகிய இடங்களிலும் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டுசிறப்பு திருப்பலி, ஆராதனை நடைபெற்றது.
* திருப்புத்தூர்: திருப்புத்தூர் டி.இ.எல்.சி.,ஆரோக்கியநாதர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு பாடல்கள் பாடப்பட்டது. தொடர்ந்து ஏசு பிறந்த நாடகம், கீத ஆராதனை நடந்தது.
டிஇஎல்சி ஆரோக்கியநாதர்,ஆர்.சி.ரோமன் கத்தோலிக், ஏ.ஜி.சர்ச் சபையில் ஐக்கிய கீத ஆராதனை நடந்தது.சபை குரு சாந்தகுமார், பங்குத்தந்தை சந்தியாகு, போதகர் தாமரைச் செல்வன் பங்கேற்றனர். நேற்று (டிசம்., 25ல்) அதிகாலை 5:00 மணிக்கு பழைய ஆராதனையும், காலை 9:00 மணிக்கு கிறிஸ்து பிறப்பு ஆராதனையும் நடந்தது.
ஆர்.சி.கிறிஸ்தவ தூய அமல அன்னை ஆலயத்தில் நேற்று முன்தினம் (டிசம்., 24ல்) நள்ளிரவு சிறப்பு வழிபாடு நடந்தது. தென்மாப்பட்டு தூய அந்தோணியார் ஆலயத்திலும் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
* அருப்புக்கோட்டை சி.எஸ்.ஐ., சர்ச்சில் கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது. நேற்று (டிசம்., 25ல்) அதிகாலை 4:00 மணிக்கு கிறிஸ்துமஸ் ஆராதனை, திரு விருந்து நடந்தது. போதகர் எபினேசர் ஜாஷ்வா இறைசெய்தி வழங்கினார். சபையார்கள் புத்தாடை அணிந்து ஆராதனையில் கலந்து கொண்டனர்.
போதகர் எபினேசர் ஜாஷ்வா, "" நம் வாழ்வின் அர்த்தத்தை புரிந்து கொள்வோம், நாம் எப்படி ஆண்டவருக்குள்ளாக நிலை நிறுத்தப்படுகிறோம் என்பதை வெளிப்படுத்தும்படி ஆண்டவர் மனித ரூபம் எடுத்தார். அவரை அறிந்து கொண்டு அவர் ஆசிர்வாதத்தை பெற்று கொள்ள முயற்சி செய்வோம்.
கிறிஸ்துமஸ் காலத்தில் நம்மால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்வோம்,என்றார். ஏற்பாடுகளை குருசேகர குழு உறுப்பினர்கள் செய்தனர்.
* ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆர்.சி,சர்ச் திருஇருதய ஆண்டவர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் ஆராதனை, திருப்பலி நடந்தது. பாதிரியார் அல்வரஸ்செபாஸ்தியான் தலைமை வகித்தார். உதவி பாதிரியார் அந்தோணிதுரைராஜ் முன்னிலை வகித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் சி.எஸ்.ஐ.,தூயதோமா ஆலயத்தில் சபைகுரு சாம்பிரபு, கிறிஸ்துமஸ் செய்தி வழங்கினார். திருவிருந்து ஆராதனை நடந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஒய்.எம்.சி.ஏ.சார்பில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தூயதோமா ஆலயத்தில் நடந்தது. தலைவர் சார்லஸ்மனோகரன் தலைமை வகித்தார். செயலர் எட்வின்கனகராஜ் முன்னிலை வகித்தார். துணைதலைவர் ராஜரத்தினம் வரவேற்றார். எம்.எல்.ஏ.,சந்திரபிரபா உதவிகளை வழங்கினார். இணை செயலர் ஜார்ஜ் நன்றி கூறினார்.
கிருஷ்ணன்கோயில் வி.பி.எம்.எம்.மகளிர் கலைகல்லூரியில் மாணவிகள் கிறிஸ்துமஸ் தாத்தா, தேவதூதர்கள், தேவதைகள், மேரிமாதா வேடமிட்டு வாழ்த்துகள் கூறி இனிப்பு வழங்கினர். சேர்மன் சங்கர், தாளாளர் பழனிசெல்வி, இயக்குனர் சபரிமாலா, முதல்வர் செந்தாமரை பங்கேற்றனர்.